பக்கம்:ஐக்கிய தமிழகம்.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16

________________

16 கோஷம், தி.க, தி.மு.க. தலைவர்களின் கற்பனையிலிருந்து உதித்த கோஷமே தவிர, மூன்று கோடித் தமிழர்களின் அல்லது 10 கோடி தென்னிந்தியர்களின் நடைமுறை வாழ்வில் உருவாகியதல்ல. எனவே, திராவிடநாடு கோஷத்தை கம்யூனிஸ்ட் கட்சி ஏற்க வில்லை. 9 மற்றப்படி, கம்யூனிஸ்ட் கட்சி விரும்பவில்லை, அதனாலேயே திராவிட நாடு கோஷத்தை அது ஏற்க மறுக்கிறது என்பது சரியு மல்ல. ஏனென்றால் கம்யூனிஸ்ட்கட்சியின் விருப்பு, வெறுப்பிற்கு இதில் இடமில்லை. நித்திய நிகழ்ச்சிகள் "திராவிடநாடு கோஷத்தை உறுதிப் படுத்தவில்லை. புதிய ஆந்திர ராஜ்யத்தின் பிறப்பு எதைக் காட்டு கிறது? ஐக்கிய கோளம், சம்யுக்த கன்னடம் என கேரள, கன்னட மக்கள் தனி ராஜ்யங்கள் அமைக்கக் கோருவதன் அர்த்தமென்ன? திராவிடநாடு கோரிக்கைக்கும் பிரத்தியட்ச நிலைமைக்கும் வெகு தூரம் என்பதே. நம்நாட்டு மக்களின் நடைமுறை வாழ்விலிருந்து அது தோன்றியதல்ல என்பதே. 66 66 திராவிடநாடு '"வல்லான் வகுத்ததே வாய்க்கால்" என் ஏற கொள்கையை அடிப்படையாகக்கொண்ட கோஷம். இந்தக் கோஷம், சரித்திரத்தை உருவாக்குவதில் மக்களுக்குள்ள முதற்பெரும் பங்கை மறுக்கிறது. பெரியார்களும், அறிஞர்களும் சர்வ வல்லமையுடைய வர்களெ ளன்று நிர்ணயிக்கிறது. அடிக்கிற காற்றுக்கு ஆடுகிற நாண புல்' மாதிரி மக்களை மதித்து, அவர்களை எப்படி வேண்டுமாயினும் ஆட்டிப்படைக்கலாமென்று கருதுகிறது. இதன் விளைவாக, இதர மக்கள் கட்சிகளையும், இதர மொழிவழி மக்களையும், அவர்களுக்குரிய உரிமைகளையும் மதிக்கத்தவறுகிறது. 66 'திராவிடநாடு '-ஒரு பிரிவினை கோஷம் திராவிட இயக்கத்தார், இந்திய யூனியனிலிருந்து "திராவிட நாடு", ஒட்டும் உறவுமின்றிக் கத்தரித்துக்கொள்ளவேண்டுமென் கின்றனர். 'டில்லியிலிருந்து பிரிவதுதான் சர்வரோக நிவாரணி என்பது அவர்களின் தாரக மந்திரம். ஜனநாயக உணர்ச்சியும் முன் னேற்ற ஆர்வமும் உலகில் அதிகரிக்க அதிகரிக்க, மக்களும் நாடுகளும் உலகக் கூட்டுறவையே மென்மேலும் நாடுகிறார்கள். இதுதான் ஜன நாயக உலகத்தின் வளர்ந்துவரும் போக்கு. இதற்கு நேர் எதிரிடை யான போக்கை "திராவிடநாடு' பிரிவினை கோஷம் எதிரொலிக் கிறது. ஆகவே இந்தப் பிரிவினைப்போக்கு, பிற்போக்குத் தன்மை வாய்ந்தது. சென்ற இரண்டு தலைமுறைகளாக ஏகாதிபத்ய எதிர்ப்பு நாட்டு விடுதலைப் போராட்டங்களிலும் சரி, நல்வாழ்வுக்காக நடை