பக்கம்:ஐக்கிய தமிழகம்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

17

________________

17 பெற்ற வர்க்கப்போராட்டங்களிலும் சரி, இந்தியாவிலுள்ள பல்வேறு இனமக்களும், ஒருவரை ஒருவர் தழுவிகின்று, ஒன்றுபட்டே போராடி வந்திருக்கிறார்கள். ஒருவரை ஒருவர் என்றும் காட்டிக்கொடுத்த தில்லை. இதில், ஆரியன் - திராவிடன், வடநாட்டான்-தென்னா டான் என்ற பேத உணர்ச்சி முன்னணிக்கு வந்ததேயில்லை. இன் றும் நேரு ஆட்சியின் பிற்போக்கை முறியடித்து மக்கள் ஜனநாய கத்தை நிலைநாட்ட, ஒன்றுபட்டே போராடுகிறார்கள். மொழி ராஜ்யக் கிளர்ச்சி வெற்றிபெறும்பொருட்டு, நேரு ஆட்சியின் முட்டுக் கட்டையை எதிர்த்து முறியடிக்கப் பல்வேறு னமக்களும் ஒன்று பட்டே போராடுகிறார்கள். ஆகவே, மொழிராஜ்யவாதிகள் இந்திய யூனியனிலிருந்து பிரிந்து தனித்துப்போக விரும்பின துமில்லை ; விரும்பவுமில்லை.ஏனென்றால் மொழிராஜ்யக் கோரிக்கை இந்தியக் கூட்டாட்சியில் அழிவை அல்ல ஆக்கத்தை, பலவீனத்தையல்ல பலத்தைக் காண்கிறது. "திராவிடநாடு' கோரிக்கை, இந்திய யூனியனிலிருந்து பிரிந்து போவதில்தான், ஆக்கத்தை, வலுவைக் காண்கிறது. காரணம், அது ஜனநாயக சக்திகளிடையில் இந்தியாவில் சரித்திரபூர்வமாக வளர்ந்து வரும் ஒற்றுமையைப் பார்க்க மறுக்கிறது. மக்களுடைய கூட்டுப் போராட்டத்தின் இறுதிவெற்றியில் நம்பிக்கைவைக்க மறுக்கிறது. எனவே மொழிராஜ்யக் கிளர்ச்சியின் வெற்றியும், பிற்போக்கு நேரு ஆட்சி ஒழிந்து மொழிராஜ்யங்கள் தன்னிச்சையாக இணைந் போகும் மக்கள் ஜனநாயக இந்தியக் கூட்டாட்சியின் வெற்றியும் சர்வநிச்சயமென்பதையும் துலைநோக்குடன் பார்க்க மறுக்கிறது. து மலாப் ஆகவே முற்போக்கு கோஷத்தோடு பிற்போக்கு கோஷத்தை யும் போட்டு,குழப்பவேண்டியது திராவிடத் தலைமைக்கு தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஒருபுறத்தில், ஸ்டாலினையும், மா-சே-துங்கை யும் வானத்தில் தூக்கிவைத்துப் புகழுவதும், சோவியத் யூனியனையும் மக்கள் சீனத்தையும் அவற்றின் அரும்பெறல் பேறுகளையும் வாயாரப் பாராட்டுவதும் மறுபுறத்தில், ஜின்னாவின் பாதையில் சென்று திரா விடநாடு பெறுவோமென்று வீரமுழக்கம் புரிவதும், பர்மா பிரிவி னையை, பாகிஸ்தான் பிரிவினையை திரும்பிப்பார் என்பதும் அவர்க ளுடைய போர்த் தந்திரத்தின் கணிசமான அம்சமாக உருவாகி இருக் கிறது. விசால ஆந்திரம், ஐக்கிய கோளம் அமைப்பு என்பது, ந்தியக் கூட்டாட்சியிலிருந்து பிரிந்து போகும் பிற்போக்குப் பிரிவினை நோக் கம் உடையதல்ல; ஒவ்வொரு ன வளர்ச்சிக்கும் உத்தரவாத மளி சித்து சகல இனங்களும் நேசப் பாங்குடன் ஒரு குடும்பமாக வாழ அடிகோலும் தன்மை வாய்ந்தது. பிரிட்டிஷார் அமைத்த மாகாணங்