பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 ஒரு நூறு சிறு விளையாடடுககள

94. கொண்டு வாருங்கள் (One over)

ஆட்ட அமைப்பு: ஆட இருக்கின்ற அனைவரையும் ஒடத் தொடங்கும் கோடு ஒன்றின் பின்னால், முதலில் நிற்குமாறு செய்ய வேண்டும். அவர்களுக்கு எதிரே30அடி தூரத்தில் ஒரு கோடு போட்டு, அதில் ஆங்காங்கு கட்டைகள் (Blocks) அல்லது பொம்மைகள் அல்லது கட்டைக் குண்டுகள் (Dumb Bells) போட்டு வைத்திருக்க வேண்டும்.

எத்தனை ஆட்டக்காரர்கள் இருக்கிறார்களோ அந்த எண்ணிக்கையில் கட்டைகள் 5 குறைவாக இருக்க வேண்டும். அதாவது 40 பேர் இருந்தால் 35 கட்டைகள். ஆடும் முறை: விசில் ஒலிக்குப் பிறகு, ஆட்டக்

காரர்கள் ஒடிப்போய் தனக்கென்று ஒரு கட்டையை