பக்கம்:ஒரு நூறு சிறு விளையாட்டுக்கள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

டாக்டர் எஸ்.நவராஜ் செல்லையா

135

எடுத்துக் கொண்டு ஓடி வந்துவிட வேண்டும். கட்டை கிடைக்காதவர்கள் ஆட்டமிழப்பார்கள் (Out). மீண்டும் முன்போல் ஆட்டத்தைத் தொடர்ந்திட வேண்டும். கடைசியாக இருக்கும் ஒருவரே வெற்றி பெற்றவராவார்.

குறிப்பு: ஆட்டக்காரர்கள் எண்ணிக்கை குறையக் குறைய, கட்டைகளின் எண்ணிக்கையும் குறைத்துக் கொண்டே வர வேண்டும்.

95. அசையாமல் நில்!

(No More Moving)

ஆட்ட அமைப்பு: ஆட்டக்காரர்களில் ஒருவரின் கண்ணைக் கட்டி நடுவில் நிற்க வைத்து, மற்றவர்களை அவரைச் சுற்றி நின்று கொண்டிருக்குமாறு கூற வேண்டும்.

ஆடும் முறை: கண் கட்டப்பட்டிருப்பவர் ஒன்று என மெதுவாக (Slowly) எண்ணத் தொடங்கியவுடன், சுற்றி இருப்பவர்களும் மெதுவாக நகரத் தொடங்க வேண்டும்.

10 என்று எண்ணியவுடன், எல்லோரும் அசையாமல் நில்லுங்கள் என்று சத்தமாகக் கத்த வேண்டும். உடனே அனைவரும் அந்தந்த இடத்திலேயே நின்றுவிட வேண்டும்.

கண்கட்டப்பட்டிருப்பவர் அவர்கள் அருகிலே வந்து நின்றிருப்பவர்களைத் தொட முயற்சிக்க வேண்டும். தன் அருகில் தொட வந்து விடும்போது, நிற்கும் ஆட்டக்காரர் குனிந்தோ, நெளிந்தோ, உட்கார்ந்தோ, தப்பித்துக் கொள்ளலாம். ஆனால் அந்த இடத்தை விட்டு நகரவே