பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

halfword

213

hardware cache


யில் காட்டுவது.உருவப்படத்தில் சற்றே இருள் சாயலுள்ள பகுதியிருப்பின்,நுண்பதிவுப் படத்தில் அமையும் புள்ளி பெரிதாக இருக்கும்.மரபு வழியிலான பதிப்புத்துறையில்,உருவங்களை ஒர் இடைத்திரையின் வழியாக ஒளிப்படம் எடுத்து இத்தகைய நுண்பதிவுப் படங்களை உருவாக்குவர். கணினிப் பதிப்புத் துறையில் நுண்பதிவுப் படப்புள்ளி என்பது ஒளியச்சுப் பொறி அல்லது இலக்கமுறை உருச்செதுக்கி(Image setter)யால் அச்சிடப்பட்ட புள்ளிகளின் தொகுப்பாக இருக்கும். இரண்டு முறையிலும் நுண்பதிவுப் படப்புள்ளிகளின் எண்ணிக்கை ஓர் அங்குலத்தில் இத்தனை வரிகள் என அளவிடப்படுகிறது.அதிகத் தெளிவுள்ள அச்சுப் பொறியெனில் அதிகப் புள்ளிகள் இடம்பெற்று படத்தின் தரம் மிகும்.

halfword:அரைச்சொல்:கணினி கையாளும் சொல்லின் பிட்(துண்மி)எண்ணிக்கையில் பாதி, ஒரு சொல் 32 துண்மிகள்(பிட்) எனில் அரைச்சொல் என்பது 16துண்மி(பிட்)களை அல்லது இரண்டு பைட்டுகளைக் கொண்டிருக்கும்.

hat:நிறுத்துகை.

halt instruction:நிறுத்துகை ஆணை.

hand device:கைச் சாதனம்.

handheld computer:கையகக் கணினி: கையடக்கக் கணினி.

hard configuration:வன் தகவமைப்பு.

hard contact printing:வன் தொடர்பு அச்சு.

hard disk backup programme:நிலைவட்டுக் காப்பு நிரல்.

hard disk type:நிலைவட்டு வகை:ஒரு நிலைவட்டு எந்த வகையைச் சார்ந்தது என்பதைக் கணினிக்குத் தெரிவிக்கும் ஒரு எண் அல்லது சில எண்கள்.நிலைவட்டிலுள்ள எழுது/படிப்பு முனைகளின் எண்ணிக்கை,உருளைகளின் (Cylinders)எண்ணிக்கை ஆகியவற்றை அவ்வெண்கள் குறிக்கின்றன.நிலைவட்டின் வகையைக் குறிக்கும் இவ்வெண்கள் வட்டின் மீதுள்ள பெயர்ச்சீட்டை எழுதப்பட்டிருக்கும். கணினியில் வட்டினை நிறுவும் போது அவ்வெண்களை கணினியில் உள்ளீடாகத் தரவேண்டும்.சீமாஸ் அமைப்புநிலை நிரலில் அவற்றைத் தரவேண்டியிருக்கும்.

hard page break:வன் பக்க முறிப்பு.

hard sectored disk:வட்டப்பிரிவு துளைவட்டு:வட்டிலுள்ள ஒவ்வொரு வட்டப் பிரிவின் தொடக்கத்தையும்,உணர்விகள் (sensors) அடையாளம் காண்பதற்கு ஏதுவாக, துளையிடப்பட்டுள்ள நெகிழ்வட்டு.

hardware abstraction layer:வன்பொருள் கருத்தியல் அடுக்கு:விண்டோஸ் என்டி போன்ற உயர்நிலை இயக்க முறைமைகளில்,சில்லு மொழிக்(Assembly Language)கட்டளைகளை பிரித்துத்தரும் அடுக்கு.வன்பொருள் கருத்தியல் அடுக்கு,பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (Application Programming Interface-API) போலவே செயல்படுகிறது.சாதனம் சாரா(device independent)பயன்பாடுகளை உருவாக்க நிரலர்கள் இவ்வடுக்கினைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

hardware cache:வன்பொருள் இடைமாற்றகம்.