பக்கம்:கணினி களஞ்சிய அகராதி-2.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

hardware check

214

harvard architecture


hardware check:வன்பொருள் சரிபார்ப்பு: கணினியின் உள்செயல்பாட்டில் ஏற்படும் பிழை அல்லது சிக்கலைக் கண்டறிய கணினி வன்பொருள் தானாகவே மேற்கொள்ளும் சரிபார்ப்பு(பரிசோதனை)நடவடிக்கை.

hardware conflict:வன்பொருள் முரண்பாடு.

hardware dependent:வன்பொருள் சார்பி; வன்பொருள் சார்ந்த ஒரு குறிப்பிட்ட கணினி அமைப்பில் மட்டுமே செயல்படக்கூடிய நிரல்கள், மொழிகள்,சாதனங்கள் மற்றும் பிற கணினி உறுப்புகள்.எடுத்துக்காட்டாக,சில்லுமொழி (Assembly Language) ஒரு வன்பொருள் சார்பியாகும்.பொறிமொழி (Machine Language), ஒரு குறிப்பிட்ட வகை நுண்செயலிக்கென உருவாக்கப்பட்டு அதில் மட்டுமே செயல்படக் கூடியதாகும்.

hardware dump,automatic:தானியங்கு வன்பொருள் திணிப்பு:தானியங்கு வன்பொருள் கொட்டல்.

hardware flow control:வன்பொருள் பாய்வுக் கட்டுப்பாடு.

hardware profile;வன்பொருள் குறிப்புரை: ஒரு கணினிக் கருவி பற்றிய வரையறைகள் மற்றும் பண்பியல்புகள் பற்றிய ஒரு தகவல் தொகுப்பு.புறச்சாதனங்களைக் கணினியுடன் இணைத்துச் செயல்பட வைக்க,இந்தத் தகவல் குறிப்புரையின் அடிப்படையிலேயே கணினியில் வரையறுப்புகள் செய்து தயார்ப்படுத்த வேண்டும்.

hardware reset:வன்பொருள் மீட்டெமை.

hardware tree:வன்பொருள் மரவுரு: விண்டோஸ் 95 இயக்கமுறையில்,கணினி அமைப்பின் வன்பொருள் சாதனங்களின் வரையறைகள்,தேவைகள் பற்றிய தகவல்கள் அடங்கிய ஒரு தரவுக் கட்டமைவு(data structure). ஒரு மரத்தில் வேரில் தொடங்கி,கிளை பிரிவது போன்ற கட்டமைப்பைக் கொண்டிருக்கும். அதிலுள்ள ஒவ்வொரு கணுவும் (nodes) இயங்கும் ஒரு சாதனத்தைச் சுட்டுகிறது.இந்த வன்பொருள் மரவுரு அமைப்பு இயங்குநிலையிலேயே வடிவமைக்கப்படுகிறது.ஒவ்வொரு முறை விண்டோஸ் 95 இயக்கப்படும்போதும் இந்தப் பட்டியல் புதுப்பிக்கப்படுகிறது.இந்த மரவுருப்பட்டியலே விண்டோஸ் 95 முறைமையின் இணைத்து-இயக்கு(plug and play) திறனை இயல்விக்கிறது.

hardware windowing:வன்பொருள் சாளரமாக்கும்.

Harvard architecture:ஹார்வார்டு கட்டுமானம்:நுண்செயலிக் கட்டுமானத்தில் ஒரு வகை.நினைவகத்திலிருந்து ஆணைகளைக் கொணரவும்,தகவலை எழுத/படிக்கவும் தனித்தனிப் பாட்டைகளைக் கொண்டிருக்கும். ஒரேநேரத்தில் நினைவகத்திலிருந்து ஆணையைக் கொணரவும்,தகவலை எழுத/படிக்கவும் முடியும் என்பதால்,செயலியின் செய்திறன்வீதம் அதிகரிக்கிறது.இக்கட்டுமானமுறை நினைவக வடிவமைப்பை உச்சதிறன் உடையதாக்கவும் வழி வகுக்கிறது.எப்படியெனில்,ஆணைகள் எப்போதும் ஒன்றன்பின் ஒன்றாக வரிசையாய்க் கொணரப்படுகின்றன;ஆனால் தகவலைப் படிப்பதோ