பக்கம்:கபோதிபுரக்காதல்.pdf/78

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காதல்

77


அந்த ஓட்டைப் படகுக்குக் கருப்பையா ஒட்டுப்பலகை! ஆனால் ஒட்டுப் பலகைதான் எத்தனை நளைக்குத் தாங்கும். அதுவும் பிய்த்துக் கொண்டு போய்விட்டது ஒருநாள். பிறகு படகே கவிழ்ந்துவிட்டது. கணவனே மாண்டான் இனி சாரதா கரை சேருவது எப்படி முடியும்?

“முடியுமா? முடியாதா?”

“நான் என்ன பதில் கூறுவேன்”

“உன் உள்ளத்தில் தோன்றுவதை, உண்மையைக் கூறு.”

“ஊரார்.....”

“ஊரார். பாழாய்ப்போன ஊராருக்குப் பயந்து பயந்துதானே நாம் இக்கதிக்கு வந்தோம். அறுபட்ட தாலி, பொட்டையான கண், மரத்தில் தொங்கிய பிணம் இவை ‘ஊரார் ஊரார்’ என வீண் கிலிகொண்டதால் வந்த விளைவுகள் என்பது ஊராருக்குத் தெரியுமா? உன் காரியத்துக்கு, ஊரார் ஒருவரையும் பாதிக்க முடியாதா? உன் காரியத்தை நீ செய்து கொள். உன் உள்ளம், உனக்கு அதிகாரியா, ஊராரா? ஊராருக்கென்ன சாரதா? ‘இது ஆகுமா அடுக்குமா? தாலி அறுந்த முண்டைக்குக் கண் இழந்த கபோதியா?’ என்றுதான் கூறுவர். ஏளனம் செய்வர். எதிர்ப்பர். நீ ஏழைப் பெண்ணாக இருந்தால், உன்னைச் சமூக பகிஷ்காரம் செய்வர். ஆனால், அதனைப் பற்றி நீ ஏன் கவலைகொள்ள வேண்டும். சாரதா, கேள் நான் சொல்வதை! நான் கண்ணிழந்தவன். ஆனாலும், உனக்குப் பார்வை தெரிந்த காலத்தில் நான் கண்ட காட்சிகள் இந்தச் சமுதாயத்தின் சித்திரங்கள், எனக்குப் புகட்டும் பாடம் இதுதான்; சமூகம், திடமுடன் யார் என்பதைச் செய்யினும் பொறுத்துக் கொள்ளும், தாங்கி, பதுங்கினால் அவர்கள்மீது பாய்ந்து அவர்களைப் பதைக்க வைக்கும்.