பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 பேராசிரியர் கா. ம. வேங்கடராமையா

முற்றுணை ஆயினானை மூவர்க்கும் முதல்வன் தன்னை சொற்றுணை ஆயினானைச் சோதியை ஆதரித்து உற்றுணர்ந் துருகி ஊறி உள்கசி வுடைய வர்க்கு நற்றுனை யாவர் போலும் நனிபள்ளி அடிக ளாரே'

இது அப்பர் திருநனி பள்ளியில் பாடியது. திருநனிபள்ளி இறைவன் பெயர், 'நற்றுனையப்பர்' என்பது இவ்வூர்க் கல்வெட்டொன்றில், நற்றுணையாண்டார் நந்தவனம் என்று ஒரு நந்தவனம் காணப்பெறுகிறது."

சிலந்தியைச் சோழனாக்கினான்

பண்டொருகால் ஒரு சிலந்தி திருவானைக்கா எம்பெருமாற்குக் கூடுகட்டி வழிபட்டு வந்தது. அப்பெருமானை ஒரு யானையும் வழிபட்டு வரலாயிற்று. சிலந்தி கட்டும் கூட்டை அநுசிதம் என்று கருதிய யானை அக்கூட்டை அழிக்கலாயிற்று. யானை தன் கூட்டினை அழித்ததனைப் பொறாத சிலந்தி யானையின் துதிக்கையிற் புக, யானை உயிர் நீத்தது. சிலந்தியின் உயிரும் பிரிந்தது. எனினும் சிலந்தி மறு பிறவியில் அரசாணயிற்று. அவ்வரசனே கோச்செங்கட்சோழன். இங்ங்னம், சிலந்தி சோனானமையைத் திருநாவுக்கரசர்,

'சிலந்தியும் ஆனைக் காவில் திருநிழற் பந்தர் செய்து

உவந்தவண் இறந்த போதே கோச்செங்க ணானு மாக கலந்தநீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள் குலந்தனில் பிறப்பித் திட்டார் குறுக்கைவிரட்டனாரே'

என்று திருக்குறுக்கை வீரட்டானத்துப் பதிகத்துப் பாடியுள்ளார் சிலந்தியைச் சோழனாக்கிய அருட்செயலை வியந்து போற்றினர், அந்நாட்பெருமக்கள். இறைவனைச் ‘சிலந்தியைச் சோழனாக்கினான்' என்று Q] ПШ ПТІГІ வாழ்த்தினர் திருவானைக்காவல் ஒரு தோப்புக்குச் சிலந்தியைச் சோழனாக்கினான் திருத்தோப்பு என்றும் பெயரிட்டனர். இது.