பக்கம்:கல்வெட்டில் தேவார மூவர்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வெட்டில் தேவார மூவர் 35

'தேர்போல்' என்று தொடங்கும் குலசேகரபாண்டியனது திருவானைக்காக கல்வெட்டில் காணப்பெறுவது. அத்தோப்பு ஒரு நிலத்துக்கு எல்லை கூறுங்கால் கூறப்பெற்றது. அக்கல்வெட்டுப் பகுதி பின்வருமாறு:

'இவர்க்கு விற்றுக்குடுத்த நிலமாவது உள்ளுர் திருப்புடை விளாகத்துச் சிலந்தியைச் சோழனாக்கினான் திருத்தோப்புக்கு நீர் பாய்கின்ற வாய்க்காலுக்கு மேற்கு.'

நல்லநாமம் உடையான்

மேற்படி கல்வெட்டில் கையெழுத்து இட்டவர்களில் ஒருவர், “நல்லநாமம் உடையான்' என்ற பெயருடையவர். நல்ல நாமமுடையான் என்பது சிவபெருமானைக் குறிக்கும்.

சிவபெருமானுடைய திருநாமங்களில் ஒன்று திருவைந்தெழுத்தாகும்; 'திருநாமம் அஞ்செழுத்தும செப்பாராகில்', 'எந்தையார் திருநாமம் நமச்சிவாய' என்ற

அப்பர் வாக்கே இதனை வலியுறுத்தும். இத்திருப்பெயரையே 'நல்ல நாமம்' என்று அப்பர் பின்வரும் பாடலில் கூறியுள்ளார்.

'கல்லி னோடேனைப் பூட்டி யமண்கையர் ஒல்லை நீர்புக நூக்கவென் வாக்கினால் நெல்லு நீள்வயல் நீலக் குடியரன் நல்ல நாமம் நவிற்றியுய்ந் தேனன்றே.'

நஞ்சமுது செய்தான்

திருநாவுக்கரசர்க்குச் சமணர்கள் நஞ்சு கலந்த பாற் சோறுாட்டினர். நஞ்சும் அமுதாயிற்று நாதனடிய ாராகிய திருநாவுக்கரசருக்கு.

'துஞ்சிருள் காலை மாலை தொடர்ச்சியை மறந்தி ராதே

அஞ்செழுத் தோதினாளும் அரனடிக் கன்பதாகும் வஞ்சனைப் பாற்சோறாக்கி வழக்கிலா அமணர் தந்த நஞ்சமு தாக்கு வித்தார் நனிபள்ளி அடிக ளாரே'