உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கள்வர் தலைவன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சி-1]

கள்வர் தலைவன்

9

ஒன்றும் தெரியாது. ஆனால் எனக்கொன்று மாத்திரம் சந்தேகமாயிருக்கின்றது. என்னுடைய பாத்திரத்திலல்லவோ விஷம் முதலிலிருந்தது; ஆகவே அது என்னைக் கொல்லவல்லவோ வைக்கப்பட்டிருக்க வேண்டும். இதைப் பிதா யோசியாமற் போனாரே.
ஜெ.அது விஷமென்று உமக்கு உறுதியாக எப்படித் தெரியும் ?
ஏ.நான் என்னுடைய தங்கையாகிய சுசங்கதையைக் கேட்டேன். அவள் பஞ்சலோக பாத்திரத்தில் உருமாறியபடியினால் அது விஷமாகத்தானிருக்க வேண்டுமென்று பிதா கூறியதாகச் சொன்னாள். அதுவுமன்றி அந்த உருமாறிய ஜலத்தை பிதாவானவர் ஒரு நாய்க்கிட, அது உடனே வலது புறத்தில் ஒருவித வலி கண்டு இறந்ததாம். அப்பா, இதிலொரு ஆச்சரிய மிருக்கின்றது. இரண்டு வருடங்களுக்கு முன் என் கைக்குழந்தையும் வலது பக்கத்தில் ஒருவித வலி கண்டிறந்தது. அது இறந்தது போலவே இந்நாயும் இறந்ததாக என் தங்கை எனக்குக் கூறினாள்.
ஜெ.என்ன ! உம்முடைய கைக்குழந்தையா ?
ஏ.ஆம், அப்பா ! அப்பா !, மற்றவைகளையெல்லாம் கேட்ட நீ இதையும் கேள். இவ்வாறு திடீரென்று வலிகண்ட குழந்தை இறந்ததுமன்றி அன்றிரவு அரண்மனையினின்றும் அப்பிரேதம் காணாமற் போய்விட்டது. பிரேதத்தை யாராவது திருடுவார்களோ- ? அப்பா ! என்ன ? என்ன ?
ஜெ. ஆகா! சந்தேகமேன்-----குழந்தையென்றும் பார்க்கலா காதா ! -மூன்றாவதோ !--இப்பொழுது நன்றாய் எல்லாம் விளங்குகின்றது ! செளரியகுமாரா !
ஏ.என்ன செளரிய குமாரனைப்பற்றி ? --என்ன அப்பா யோசிக்கின்றாய் ?-அப்பா நீ யார் ?
ஜெ.[தனக்குள்] காலம் வந்து விட்டது. (ஏமாங்க அரசே அந்த விஷத்தை உம்முடைய பாத்திரத்தி விட்டிருக்கக் கூடும் என்று நினைக்கின்றீர் ?
ஏ.அப்பா ! அதுதானே தெரியவில்லை எனக்கு நாத்து முதல் இது வரையில் ஒருவருக்கும் மனதறி செய்யவில்லையே! எனக்குப் பிறரேன் தீங்கு வேண்டும்? உனக்கென்ன தோற்றுகின்றது பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/13&oldid=1555812" இலிருந்து மீள்விக்கப்பட்டது