பக்கம்:கள்வர் தலைவன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

கள்வர் தலைவன்

[அங்கம்-1

ணால் பார்க்க மாட்டாரென்றும், நான் அவருக்கு விஷம் கொடுத்துக் கொல்ல முயன்றதாகவும், அதற்காக நான் ஏழு தினங்களுக்குள் தனது நாட்டை விட்டுச் செல்ல வேண்டுமென்றும் அதற்கப்புறம் தனது காட்டெல்லைக்குள் நானிருப்பேனா பின் என்னை யார்வேண்டுமென்றாலும் கொன்றுவிடலாமென்றும் கடுமையான கட்டளையிட்டனுப்பினார். பிறகு நான் என் பிதாவை நேரிற் கண்டு பேசவேண்டுமென்று என்னாலியன்றவளவு முயன்றும் அவர் ஒரே பிடிவாதமாய் என்னைப் பாரேனென்று சொல்லிவிட்டார். பிறகு--
ஜெ.உம்முடைய பிதா வைத்திருந்த பாத்திரம் என்ன பாத்தி ரம் ஞாபகமிருக்கின்றதா உமக்கு ?
ஏ.அவருக்கென்று செய்யப்பட்ட பஞ்சலோக பாத்திரம் ஒன்று.
ஜெ.என்ன ! பஞ்சலோக பாத்திரமா ?
ஏ.ஆம், என்ன ஆச்சரியப் படுகின்ருய் ?
ஜெ.ஒன்றுமில்லே, அந்த ஐலம் எந்த வர்ணமாக மாறிய தென்று கூறினீர் ?
ஏ.வெண்மையாகப் பால்போல மாறியது. அப்பா, என்ன சேஷம் ? இதைப்பற்றி உனக்கு ஏதாவது தெரியுமா ? என்ன யோசிக்கின்றாய்?
ஜெ.[தனக்குள்] ஆகா -இரண்டாவதோ!-இதை நான் முன்பே அறிந்திருப்பேனாயின் !-அப்படியா! -நான் யாரை நோவது என்னையே! என்னையே! -உம் அப்புறம் சொல்லும்.
ஏ.பிறகு நான் எப்படியாவது பிதாவின் கோபத்தைத் தணிக்கின்றேன், நீர் இக்காட்டை விட்டுச் செல்லவேண்டாமென்று என்னைத் தன் சொந்த அண்ணன்போற் பாவிக்கின்ற செளரிய குமாரன் கூறவே, அந்த ஏழுதினங்களும் புஷ்பபுரியிலேயே இருந்துவிட்டேன். அவனுடைய பிரயத்னமும் பயன்படாமற் போகவே, அந்த ஏழு தினங்களும் கழிந்தவுடன் இனி அங்கிருப்பது அபாயமெனக் கருதி மாறுவேடம் பூண்டு இங்கு வந்து வழிதெரியாது உழன்றுகொண்டிருக்கும் பொழுது இப்பாதகர்கள் கையிலகப்பட்டேன். இதுவே நடந்த விர்த்தாந்தம். என்னுடைய பிதாவின் மீது ஆணைப்படி இதில் சற்றேனும் பொய்யில்லை. என்னுடைய பாத்திரத்தில் யார் முன்பாக விஷத்தை வார்த்து வைத்திருக்தார்களோ இதெல்லாம் சத்தியமாக எனக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/12&oldid=1555809" இலிருந்து மீள்விக்கப்பட்டது