பக்கம்:கள்வர் தலைவன்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காட்சி-1]

கள்வர் தலைவன்

7

கேள்விப் பட்டேன். அப்பா, அதையேன் கேட்கின்றாய்? உனக்கு அவனைத் தெரியுமோ ?
ஜெ.இல்லே சும்மா கேட்டேன். அப்புறம் சொல்லும், தாம் இந்த ஸ்திதிக்கு வந்ததேது? அதைக் கூறும்,
ஏ.என்னுடைய பிதா நான் அவருக்கு விஷம் கொடுத்துக் கொல்லப் பிரயத்தனப் பட்டதாகக் கூறி என்னைத் தன் நாட்டெல்லைக்குள்ளிருந்தால் யார் வேண்டுமென்றாலும் கொன்றுவிடலாமென்று கட்டளையிட்டுத் துறத்திவிட்டார். [கண்ணீர்விடுகிறார்.]
ஜெ.அரசே வருந்தவேண்டாம் சொல்லும்.-உம்.
ஏ.அப்பா ! என்னைப்பார்த்தால் தகப்பனுக்கு விஷம் கொடுத்துக் கொல்லும்படியான துரோகியைப்போலவாயிருக்கின்றது ? அப்பா! அப்படிப்பட்ட பாதகர்களும் இவ்வுலகிலிருக்கிறார்களோ ? அதை நினைத்தாலும் எங்நெஞ்சம் பகீர் என்கின்றதே ! -
ஜெ.இதென்ன தாம் ஒர் ஆடவன் என்பதை மறந்திரா என்ன ? அரசே ! நீர் உம்முடைய பிதாவுக்கு இவ்வாறு ஒரு காலும் துரோகம் நினைத்தும் இருக்கமாட்டீர் என்று உறுதியாக நம்புகின்றேன் நான். ஆயினும் உம்முடைய, பிதா எதைக்கொண்டு இவ்வாறு உம்மீது சந்தேகித்தார்? அதைச் சற்று விளங்கச் சொல்லும்,
ஏ.இதோ சொல்லுகிறேன். உன்னிடம் கூறியாவது என் துயரம் தணிகின்றேன். சில தினங்களுக்கு முன் ஒரு நாள் இரவு அரண்மனையில் நாங்களெல்லோரும் போஜனம் பண்ணிக் கொண்டிருக்கும் பொழுது பிதா தன் பாத்திரத்திலிருந்த தண்ணிரைச் சாப்பிட்டுவிட்டு இன்னும் வேண்டுமென்று கேட்க, அவர் பக்கத்திலுட்கார்ந்திருந்த நான் எனது பாத்திரத்திலுள்ள ஜலத்தை அவருடைய பாத்திரத்தில் விட்டேன். உடனே என் பாத்திரத்திலிருந்த பொழுது வெறும் ஜலமாயிருந்தது அவருடைய பாத்திரத்திற் பட்டமாத்திரத்தில் வெண்மைநிறமாக மாறியது. அதைக் கண்டவுடன் என்பிதா முகம் கறுகி என்னைச் சற்று நேரம் கோபித்து உற்றுப்பார்த்துவிட்டுச் சாப்பாட்டை விட்டு அப்பாத்திரத்தை அப்படியே எடுத்துக்கொண்டு தன் அறைக் குட் சென்றார். இதை யெல்லாம் கண்டவுடன் நான் திக் பிரமைகொண்டு சற்று நேரம் அசைவற்றுப் போயினேன். பிறகு என் பிதாவிடம் என்னவென்று விசாரிக் கச்சென்றபொழுது, தான் என்ன மறுபடியும் கண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/11&oldid=1555801" இலிருந்து மீள்விக்கப்பட்டது