உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கள்வர் தலைவன்.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கள் வர் தலைவன்


முதல் அங்கம்

முதற் காட்சி

இடம்:- தூமகாரண்யத்தில் ஒரு காட்டாற்றை யடுத்த அடர்ந்த இடம். இங்குள்ள கள்வர்கோயிலுக்கெதிரில் ஏமாங்கதன் பலிபீடத்தருகிலுள்ள

ஒரு ஸ்தம்பத்திற் கட்டப்பட்டிருக்கிறான்.

ஏ. ஐயோ! இப்பா தகர்கள் சீக்கிரம் வந்து என்னைக் கொன்று விட மாட்டார்களா! எத்தனை நேரம் கானிவ் வேதனையிலிருப்பேன் ? என் ஐம்பொறிகளும் கலங்குகின்றனவே. என் மனமும் ஒரு வழி நில்லாது பெருஞ்சுழல் மத்தியிலகப்பட்ட துரும்பைப் போல் தத்தளிக்கின்றதே! இம்மனோ சஞ்சலத்தையும் தேக பாதையையும் அனுபவிப்பதைவிட சீக்கிரம் இறப்பேனாயின் நான் எவ்வளவு பாக்கியம் பண்ணினவனாயிருப்பேன். ஐயோ! இக்கதியனுபவிப்பதற்கோ நான் மாறுவேடம் பூண்டு புஷ்பபுரியினின்றும் தப்பிவந்தேன் ! நான் அங்கேயே இருந்திருப்பேனாயின் யாராவது என்னே ஹிம்சியாது சீக்கிரம் கொன்றுவிட்டிருப்பார்களே! இந்த யமவேதனைக்கெல்லாம் ஆளாயிருக்க மாட்டேனே! ஐயோ! இக்கொடிய பாதகர்கள் கையிற் படுமுன் என்னுயிரையாவது மாய்த்துக்கொண்டிருக்கலாகாதா நான்!-ஆ ! யார் விதி யாரை விட்டது ஈசனே! ஈசனே! என்னைக் கைவிட்டீரே!-சீ! ஈசன் ஒருவனிருக்கின்றானோ இருந்தால் ஏன் நான் இத்கதிக்கு ஆளாக்கப்பட்டிருக்கவேண்டும் ! நான் புத்தி அறிந்தது முதல் பிறருக்கு ஒரு தீங்கும் செய்ததுமில்லை நினைத்ததுமில்லை. அப்படியிருக்க நான் ஏன் இக்கதிக்கு வரவேண்டும்? இதைவிடக் கேடான கதி ஒருவனுக்கு வாய்க்கப் போகின்றதோ?-பிறருக்கு நன்மை செய்தால் தனக்கு நன்மை பயக்குமென்கிறார்களே! நான் பிறருக்கு நன்மையே செய்திருக்க எனக்கு தீமையே பயந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கள்வர்_தலைவன்.pdf/5&oldid=1555676" இலிருந்து மீள்விக்கப்பட்டது