பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலறிவும் - உணர்வும்

மனிதன் அறிபவன், மனிதனுக்கு அறிவுண்டு. மனிதன் எவற்றையும் அறிபவன். எவையும் அறிவுக்கு உட்பட்டவை.

உண்மை என்பது உள்ளத்தின் தன்மை. அதாவது உட்புறத்தின் இயல். மெய்மை என்பது மெய் (உடல்) யின் தன்மை. அதாவது மேற்புறத்தின் இயல். கடலின் மேற்புரம் கண்டோன் கடலின் மெய்மை கண்டோனாவான். கடலின் உள்ளியல் கண்டோன் கடலின் உண்மை கண்டோனாவான்.

மனிதன் அறிபவன். தன்னுண்மை, தனது மெய்மை, உலகுண்மை உலகின் மெய்மை, அடங்கல் உண்மை ஆகிய அனைத்தையும் அறிபவன் (அடங்கல் - எல்லாம்)

அறிவு என்பது உண்மை, மெய்மைகளை அறிதல் என்பதனோடு அனைத்தையும் அறிதல் என்பதும் ஆகும்.

அறிவின் நோக்கம் பெரிது! அறிபவனாகிய மனிதன் தான், இல்லம், ஊர், நாடு, கண்டம்,


கவிஞர் பேசுகிறார்