பக்கம்:கவிஞர் பேசுகிறார், பாரதிதாசன்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நூலறிவும் - உணர்வும்

7


உலகம்,வானம், வானுள்ள கோளங்கள் ஆகியவை உள்ளிட்ட பெரும் புறம் அனைத்தின் உண்மையையும், மெய்மையையும் அறியும் நோக்கமுடையவன்.

இப்பெரு நோக்கமுள்ள மனிதனின் நிலையோ சிறிது. தொட்டாலன்றி உணர முடியாத உடல் கூப்பிடு தூரத்தில் உள்ள உருவத்தைக் காண முடியாத சிறு கண்கள், சிறிய காதுகள், சிறிய வாய், சிறு மூக்கு ஆகிய இவற்றையுடையவன், அனைத்தின் உண்மை மெய்மைகளை அறிதலான தனது நோக்கத்தை அவன் எவ்வாறு நிறைவேற்றுவான்! இதனால் அவன் கல்வி கற்றல் அவசியமாகிறது.

கல்வி என்பதற்குப் பெயர்ப்பு என்பது பொருள். கல்லல் கல்வி, கற்றல் கற்பு அனைத்தும் ஒரு பொருட் சொற்கள். சூரியன் பல்லாயிர அடி உயரத்தில் இருக்கிறது; ஒளியால் வெப்பத்தால் அது அறியப்படுகிறது. இதுவன்றி அதன் உட்புறத்தின் தன்மை வெளிப்புறத்தின் தன்மை அறியப்படவில்லை. ஆயினும் அறிஞர் ஆக்கிய நூற்களில் அச் சூரியனது விஷப் பெயர்ப்பு உண்டு. சூரியனால் எதிரி பார்த்த அறிவு அதைப்பற்றிய விஷயப் பெயர்ப்புள்ள கல்வியால் நிரம்பலாம்.

அறிவு என்பதற்கும், நூலறிவு அல்லது கல்வியென்பதற்கும் வித்தியாசம் உண்டு. அறிவு உண்மை மெய்மைகளை மாத்திரம் ஆதாரமாக


கவிஞர் பேசுகிறார்