பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்ற இடத்திலும் இவருடைய நன்றியறிவு உணர்ச்சிததும்பி வெளிப்படுகின்றது என்பதைப் பலர் ஒப்புக்கொள்வர். வள்ளல் அழகப்பரைப்பற்றி இவர் பாடியுள்ள பாடல்கள் மிக்க கவிநயம் வாய்ந்தவை.

  • பொருள் கொடுத்தான் மிகக்கொடுத்தான் ; அதனின் மேலாப்

புகழ்கொண்டான் ; கொடைசிறிது, சிறிய ஒன்ருல் அருள் பழுத்தான் கொண்டதுதான் மிகுதி என்பேன் ; அதிலென்ன வியப்புளதோ ? மேலும் அன்ன்ை ஒருவகையில் கஞ்சனெனக் குறையும் சொல்வேன் ; உவந்தளித்தான் கிதியமெலாம், உண்மை, ஆளுல் வருபுகழில் சிறிதேனும் பிறர்க்கீங் தானே ? வாரிவாரிப் புகழெல்லாம் வைத்துக் கொண்டான் ’’ எனக் கூறிய இடத்தில் அழகப்பச்செட்டியாராகிய பெரும் வள்ளலைக் கஞ்சன் எனக் குறைகூறுவதுபோல் கூறிப் புகழ்ந் துரைத்த திறம் வியக்கத்தக்கது. அவருடைய செல்வத்தை யெல்லாம் உவந்து அளித்தார் என்பது உண்மையாயினும், அவருடைய புகழ் சிறிதாவது எவருக்காவது பகிர்ந்தளித் தாரா என்ற விைைவ எழுப்பி, முழுதும் ஈந்து முழுப்புகழையும் தம தாக்கிக்கொண்டவர் அவர் என விளங்கவைத்த திறமை மதிக்கத் தக்கது. " அள்ளிஅள்ளி வழங்குதற்குக் கையை ஈந்தான் அழகாகப் பேசுதற்கு வாயை ஈந்தான் உள்ளமெனும் ஒருபொருளை உரத்துக் கீந்தான் உடம்பினையும் கொடுநோய்க்கே ஈந்தான் அங்தோ ! வெள்ளமென வருகிதியம் வாழும் வீடு வினே முயற்சி அத்தனையும் கல்விக் கீந்தான் உள்ளதென ஒன்றில்லை. அந்தப் போதும் உயிருளதே கொள்களனச் சாவுக் கீந்தான் ' எனப் பாடியுள்ள கவியில் அடங்கிக்கிடக்கு ம் உயரிய கருத் துக்களும் பொங்கித் ததும்பும் உணர்ச்சிகளும் இக்கவிஞரின் ஆற்றலுக்குச் சான்று பகர்கின்றன. -: யாதும் ஊரே யாவரும் கேளிர் ' என்ற தலைப்பில் என் தலைமையில் சில ஆண்டுகளுக்குமுன் திருச்சி வானுெலி நிலையத்தின் கண் கவியரங்கு ஏறிய இக்கவிஞர்