பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்னும் நாம் அவ்வுலகை ஏறிட்டும் பார்த்திலமே என்னும்போ துளம் வருந்தி இரங்கலலால் என் செய்வோம் ? இனியேனும் அவ்வுலகை இங்காக்க முற்படுவோம் முனியாமல் அவ்வுலக முழுப்பொருளும் காண்போம் நாம் : யாதும் ஊரே யாதும்ரும் ஊரென்ருல் ஏதிலர்தம் நாடெல்லாம் சூதுமுறை செய்து சுருட்டி விழுங்குவதா ? யாதும்கம் ஊரென்ருல் ஏதிலர்க்கு நம்நாட்டைச் குதுநெறி யறியாமல் சுருட்டிக் கொடுப்பதுவா ? அன்றதுதான் பேதைமையாம் ; அவ்வவர்க்கு மொழியுண்டு தொன்றுதொட்ட பண்புண்டு சொல்வதற்கு நாடுண்டாம் இவ்விவற்ருல் பகையின்றி எதிர்ப்பின்றிப் பிறவற்றை வவ்வும் மன மின்றி வாழும் நெறியறிந்து ா நட்புறவால் உளமொன்றி நடப்பதுவே அதன்பொருளாம். பெட்புற்றுத் தமிழ் காட்டும் இவ்வுலகைப் பேணுவம் நாம் ; யாவரும் கேளிர் அனைவரும் நம் கேளிர் என்ற அம்மொழியும் அப்படியே, இனம்பலவாய் வாழ்ந்தாலும் இறுமாந்து பகைகொண்டு விலங்கினத்தின் கீழினமாய் விளையாடித் திரியாமல் குலங்கருதி மேலென்றுங் கீழென்றுங் குறியாமல் அவ்வவர்தம் நெறிபோற்றி அன்பொன்றே குறியென்று செவ்வியநன் மனங்காத்துச் செயலறமும் மிகக்காத்துத் தோழமையால் ஒன்ருகித் துாய்மையொடு உறவாகி வாழ விழைகஎன வகுத்ததுவே அதன்பொருளாம்; சாதிச் சழக்குண்டு சமயப் பிணக்குண்டு மோதிப் பகைக்க முரண்பட்ட அனைத்துண்டு 43