பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கீழான இக்குணத்தில் கேளிர் எனுமெண்ணம் பாழாம் நிலையன்றிப் பண்படுமோ நீர்சொல்லும் ! பேரறிவு படைத்தோம்நாம் பேசுகிருேம்! பகுத்துணரும் ஓரறிவு தனையிழந்தோம் உயிர்க்கின்ருேம் அந்தந்தோ ! ஊர்காத்து நகர் காத்(து) உயர் நாடு தனக்காத்துப் பார்காத்து யாதும் ஊர்ப் பண்புணர்ந்து மிகக்காத்துத் தற்காத்துத் தமிழினமுங் காத்துலகங் கேளிர் என்ற சொற்காத்து நல்லறிஞர் சூழ்துணையால் நாம் வாழ்வோம்; தைத் திருநாள் வஜௗத்த இருள் கிழித்து வாடைப் பனிநீங்க முஆளத்த இளம்பரிதி முகங்கண்டு வணங்கிடுவோம் குழைத்தெடுத்த பொங்கலுண்டு குலவிக் களித்திடுவோம் உழைப்பின் பயன்தருநாள் ஊரெல்லாம் புதுக்கும் நாள் தைத்திருநாள் இத்திருநாள் தமிழ்காட்டும் நல்லுலகில் வைத்துமணம் வாழ்வோம் மகிழ்ந்து. 44