பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இன்றைய நிலை இந்நாட்டைத் திராவிடகா டென்றும் சொல்வர் இயல்புடைய நல்லறிஞர்; இந்த நாட்டில் முன்கூட்டி மூத்தகுடி தமிழர் என்போர் நாகரிக முதிர்ச்சியினில் வாழ்ந்த நல்லோர் இன்பூட்டும் தமிழ்வாழ்வைப் பாடுங் காலை இதயத்தால் பூரித்தேன். ஆனல், இன்று பின் பாட்டுப் பாடுகிற தமிழன் வாழ்வைப் பேசுதற்கும் நானுகின்றேன் கூசு கின்றேன் (உ) இருவேறு வாழ்வு உயிர்பெரிதா ? உன்மானம் பெரிதா ? என்ருல் உயிர்சிறிது மானந்தான் பெரிதே என்பான்; உயிர்கொடுத்தும் தன் மானம் ஒன்றே காப்பான் ஒருவாழ்வே தமிழ் வாழ்வு; குறளின் வாழ்வு; துயர்வருமேல் மானத்தை விலையாய்க் கூறித் துணிமணிகள் உணவுவகை நிறையப் பெற்று வயிறுவளர்க் குந்தொழிலால் உயிரை ப் பேணி வாழ்வது வா தமிழ் வாழ்வு ? மனுவின் வாழ்வு (GP) தன்னினத்தின் ஒருமகனைத் தமிழன் தன்னைத் தருக்குடையான் பிறநாட்டான் இழித்து ரைத்தால் என்னினத்தை இகழ்ந்தவனே விட்டு வையேன் என்றெழுந்த மறவாழ்வே தமிழ வாழ்வு; தன்னலத்தைத் தனிப்புகழைப் பணத்தைக் காசைத் தக்கபடி காப்பதற்குச் சூழ்ச்சி செய்து தன்னினத்தை மாற்ருர்க்குக் காட்டிக் காலைத் தாங்குவதோ தமிழ் வாழ்வு? ஈன வாழ்வு; (டு) 70