பக்கம்:கவியரங்கில் முடியரசன் (முதல் பதிப்பு).pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு கடவுள் ஒரு சாதி என்ற பாங்கில் ஓரினமாய், அயலவரும் உறவாய் நண்பாய்ப் பெருமையுடன் தமிழ்மொழியை நாட்டைப் பேணிப் பீடு பெற வாழ்வதுவே தமிழ வாழ்வு; பெருகுதொகைக் கடவுளரும், உயர்வு தாழ்வு பிறவியில்ை பேசுகின்ற எண்ணில் சாதிக் குறுமனமும், பேதைமையும் அடிமைப் பண்பும் கொள்வதுவோ தமிழ் வாழ்வு? கொடுமை வாழ்வு. (சு) எது தமிழ்வாழ்வு? நம் பெயரில் தமிழிருத்தல், ஆடல் பாடல் நாம் கானும் நிழற்படங்கள் தமிழைக் காட்டல், செம்மையுறு திருமணத்தில் தமிழை ஓதல், செய்தித்தாள் நற்றமிழை எழுதிக் காட்டல், நம்மினத்தார் உழைப்பில் உருப் பெற்ற கோவில் நல்ல தமிழ்ப் பாட்டொ லியே முழங்கச் செய்தல், நம்பிள்ளை பயில் கல்வி தமிழாய் நிற்றல், நாடெல்லாம் தமிழா யின் தமிழ வாழ்வு (எ) எத்துணே பேர் தமிழ்ப்பெயரைத் தாங்கி யுள்ளார்? எவரேனும் ஓரிருவர் தமிழ்ப்பேர் சொன் குல் பித்தரென ஏசுவதும் கட்சி சார்த்தித் தி.மு.க. என்றிகழ்ந்தும் பேசல் உண்மை; முத் தமிழும் தி.மு. க. சொத்தா என்ன ? முளே த்தபிற கட்சிகளில் தமிழர் இல்லை? கொத்தடிமை மனப்போக்கால் அயல்மொ ழிக்கே கும்பிட்டுத் திரிவதுவோ தமிழ வாழ்வு? )كr( 71