பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

132 அணையும் கட்டி வச்சபடியினாலே காலிங்கக் கவுண்டன் என்றும் பேர் வரப்பட்டுப் பிரிசித்திப்பட்டவனாய் இருக்கும் நாளையில் முன்னாலே சபதம் கோரியிருக்கப்பட்ட பண்ணை குலத்திலே தன் பிள்ளைக்குக் கலியாணம் செய்து கொண்டு அம்ச புருஷனாய் தெய்வ கடாட்சத்துனாலே சம்பத்துனாம தேயமான காலிங்கன் என்கிற நாமதேயமும் வேளாள சாதியானபடியினாலே கவுண்டர் என்கிற நாம தேயமும் ரெண்டு நாமதேயமும் சேர்ந்து காலிங்கக் கவுண்டன் என்கிற பேர் பிரசித்திப்பட்டவனாய் தான் கட்டி வச்ச அணைக்குக் காலிங்கக் கவுண்டன் அணையென்றும் காலிங்கக் கவுண்டன் வாக்கியாவென்றும் தான் உண்டு பண்ணின நீர்ப்பாங்கு நிலத்தில் விளையப்பட்ட காலிங்க நெல்லு யென்று விளையப் பண்ணி சம்பந்த பாந்தியங்களும் செய்து கொண்டு யிருந்தான். நாவிதனுக்கு மானியம் இப்படி வாக்கியால் வெட்டி அணைகட்டி பிள்ளைக்குக் கலியாணம் பண்ணுகுற வரைக்கும் சபதம் கோரி தீட்சை வளர்த்துக் கொண்டு யிருக்கும் சமயத்தில் தெய்வ கடாட்சத் தினாலே மனோபீஷ்டம் நிறைவேறியிருக்கும் சமயத்தில் ஒரு நாள் ஆயாசத்துடனே நித்திரை பண்ணிக் கொண்டு யிருக்கும் சமயத்திலே ஒரு நாசுவன் தீட்சை மயிரை வாங்கிப் போட்டு நிலைக் கண்ணாடியை எதிரே வச்சு வணக்கத்துடனே நின்று கொண்டுயிருந்தான். நித்திரை தெளிஞ்சு நிலைக் கண்ணாடி பார்த்தவுடனே ஆயுஷ் காரமாய் இருந்த படியினாலே சந்தோஷம் வந்து நாசுவனைப் பார்த்து உனக்கு என்ன வேணுமென்று கேட்டான். அந்த நாசுவன் என் பேர் விளங்கி இருக்கும் படியாக பண்ணவேணுமென்று மனுவு கேட்டுக் கொண்டான் தாம் கட்டி வச்ச அணையோரம் தாம் இருக்கப்பட்ட காலிங்கன் பாளையத்துக்கு தென்புறம் நாசுவன் பேராலே ஊரு உண்டு பண்ணி நாசுவன் பாளையம் என்றும் பேர்