பக்கம்:காலிங்கராயன் கால்வாய்.pdf/139

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

விளங்கப் பண்ணி அந்த நாசுவனுக்கு அந்த பாளையம் சர்வ மானியமாகக் கொடுத்தார். இப்படிக்கு காலிங்கராய கவுண்டர் என்கிறபேர் பிரசித்திப்பட்டவராய் வெள்ளோட்டுக் குடியிருப்புக்கார ராய் பூந்துறை நாட்டுக்கு நாட்டாதிபத்தியத்தால் உண்டு பண்ணின அணை வாக்கியால் பரிபாலனம் பண்ணிக் கொண்டு பிள்ளை பிள்ளை தலைமுறைக்கும் காலிங்கக் கவுண்டன் என்கிற நாமதேயம் உண்டானவர்களாய் இருந் தார்கள். தெய்வமானான் பவானிக் கூடலிலே காலிங்கராயன் என்கிறவன் அணை கட்டி வச்சு பேர் பிரசித்தி பண்ணினது கலியுகாப்தம் 2000. காலிங்க கவுண்டன் கட்டி இருக்கப்பட்ட அணையிலே க்ஷ கவுண்டனையும் சர்ப்பத்தையும் சிலாபிரதிமை ரூபமாக கல்வெட்டி வச்சு சிலா சாசனமும் எழுதியிருக்கிறது. அந்த அணை போட்டு இருக்கப்பட்ட இடத்தில் குடிகள் பரம்பரையாய் வருஷப் பிரதியும் உற்சவம் பண்ணிக் கொண்டுவருகிறது. வருஷப்பிரதியும் காலிங்கக் கவுண்டன் பிரதிமைக்கு பூசை நைய்வேத்யம் பண்ணிக்கொண்டு வந்தால் வெள்ளம் வந்து வெள்ளாண்மை விளைஞ்சு கொண்டு வருகிறது. இப்படி ஈஸ்வரர் அனுக்கிரகத்தினாலே மூர்த்திகரம் உண்டாகியிருக்கிறது. ஈஸ்வர அனுக்கிரகத்துனாலே காலிங்க கவுண்டன் என்கிற அம்சை புருஷன் வம்ச பரம்பரையிலே காலிங்க சுவுண்டன் என்று பேர் வச்சுக்கொண்டு வருகிறது. ஆனைமலை போன காரணம் இப்படிக் காலிங்கக் கவுண்டன் என்கிற பேர் பிரசித்திப் பட்டவர்களாய் பலாட்டியனாய் வெள்ளோட்டு பூந்துறை நாட்டாதிபத்தியம் ஆண்டுகொண்டு வரும் நாளையிலே