பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் காலம் - 113 இங்ங்னம் திருவாசகமும், திருக்கோவையாரும் பாடிய மாணிக்கவாசகர் காலம் பலரால் பலவாறு சொல்லப்பட்டு வருகின்றது. இவற்றுள், மாணிக்கவாசகர் மூவர்க்கும் முற்பட்டவர் என்பவர் கூற்றுக்களைத் தக்க காரணங்கள் காட்டி மறுத்துக் கி.பி. 9ஆம் நூற்றாண்டே மணிவாசகர் Ss7 GULOff35 இருத்தல்வேண்டும் என்று எழுதியவருள் தஞ்சை சீநிவாசப் பிள்ளை, பூரணலிங்கம் பிள்ளை, M. சீநிவாச ஐயங்கார் என்போர் சிறப்பிடம் பெறத்தக்கவர். தடை விடைகள் (1) கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த அப்பர் பாடிய தேவாரத்தில், - "குடமுழ நந்தீசனை வாசகனாக் கொண்டாய்” என்று கூறியிருத்தல் மணிவாசகரைக் குறிப்பது என்று ஒரு சாரார் கூறுவர். மணிவாசகர் வரலாற்றைக் கூறும் இரண்டு திருவிளையாடற் புராணங்கள், வாதவூரர் புராணம், திருப்பெருந்துறைப் புராணம், உத்தரகோச மங்கைப் புராணம் என்னும் நூல்களுள் மணிவாசகர் பிறப்பு விளக்கமாகக் கூறப்பட்டுள்ளது. ஆயின், ஒன்றிலேனும் அவர் குடமுழாவை வாசிக்கும் நந்தி என்பது குறிக்கப்படவில்லை. எனவே, இக்காரணம் பொருந்தாது என்று சீநிவாசப் பிள்ளை முதலியோர் மறுத்துள்ளனர். (2) அப்பர் திருவாரூர்ப் பதிகத்தில், "நரியைக் குதிரை செய்வானும்" என்று குறித்திருத்தல், மணிவாசகர்க்காகச் சிவபிரான் நரியைப் பரியாக்கிய கதையைக் குறிக்கிறது. ஆதலால் மணிவாசகர் அப்பருக்குக் காலத்தால் முற்பட்டவர் என்று ஒரு சாரார் குறித்தனர். “இத்தேவாரத்தில் நரியைக் குதிரை செய்வானும் என்பது மணிவாசகர் கதையைக் குறிக்கிறதென்றால், அதே செய்யுளில் வரும் நரகரைத் தேவு செய்வானும் என்பதும், விரதம் கொண்டு ஆடவல்லானும் என்பதும் எந்தக் கதைகளைக் குறிக்கின்றன? 'நரியைக் குதிரை செய்தான், நரகரைத் தேவு செய்தான் என்று சொல்லாது செய்வான் எனச் சொல்லியிருப்பதனால் இவ்வரிகள், குறிப்பிட்ட கதைகளைக் குறிப்பன அல்ல என்பதும், சிவபிரானது பேராற்றலைக் குறிப்பதே அப்பர் கருத்து என்பதும் அறியத் தகுவன. நரியைக் குதிரை செய்வானும் என்னும் தொடர் மணிவாசகர் கதையைக் குறிப்பதென்று கொண்டால் மணிவாசகர் பாடிய திருவாசகத்தில் வரும், கழுமல மதனிற் காட்சி கொடுத்தும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/122&oldid=793145" இலிருந்து மீள்விக்கப்பட்டது