பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 1.4 கால ஆராய்ச்சி என்பதைச் சம்பந்தர்க்குக் கடவுள் காட்சி கொடுத்ததைக் குறிக்கிறது என்று ஏன் கொள்ளக்கூடாது? மணிவாசகர், செந்நாவலர் பரசும் என்றும், பண்சுமந்த பாடல் என்றும் திருவாசகத்தில் சொல்லியிருப்பவற்றைத் தேவாரம் பாடிய மூவரைக் குறிப்பன என்று ஏன் கொள்ளக்கூடாது?’ என்று சீநிவாசப் பிள்ளை போன்றார் கூறி மறுத்துள்ளனர். "மாணிக்கவாசகர் நரி பரியாக்கியதையும், மண் சுமந்ததையும், தம்மொடு புணர்த்துக் கூறினாரல்லர். அவை மாணிக்கவாசகர்க்கு மிக முற்பட்ட காலத்து நிகழ்ச்சிகளாய் இருத்தல் வேண்டும்” என்று திருவாளர் அநவரத விநாயகம் பிள்ளை', திரு. பொ. பழநியப்ப பிள்ளை' என்ற அறிஞர்கள் குறித்துள்ளமை கூர்ந்து நோக்கத் தககது. இவ்வாறு ஒரு சாரார் கூற்றுக்கு மற்றொரு சாரார் தக்கவாறு விடையளித்து, மணிவாசகர் மூவர்க்கும் முற்பட்டவர் அல்லர் என்று தெளிய வைத்துள்ளனர். 'பிற்பட்டவர் - காரணங்கள் (1) அகநானூற்றுச் செய்யுள் ஒன்றில் (4), திருச்சிராப்பள்ளியில் உள்ள குன்றம், விழாக்கள் மலிந்த உறையூர்க்குக் கிழக்கில் உள்ள நெடும்பெருங்குன்றம்" என்னும் பொருள்பட, கறங்கிசை விழவின் உறந்தைக் குணாது நெடும் பெருங் குன்றம், எனப்படுகின்றது. இவ்வடிகளில் அக்குன்றத்தின் பெயரோ அதனைச் சார்ந்த ஊரின் பெயரோ குறிக்கப்படவில்லை. அறுபான் மும்மை நாயன்மாருள் ஐயடிகள் காடவர் கோன் என்பவர் ஒருவர். இவர் சிறந்த வடமொழிப் புலவர்; தமிழ்ப் புலவர்; மகனிடம் அரசை ஒப்பித்து, சிவத்தளி யாத்திரை செய்து, தலத்துக்கொரு வெண்பாப் பாடினவர். இவர் வடமொழிப் புராணத்தில் சிம்ஹாங்க, பாதசிம்ஹா, பஞ்சபாதசிம்ஹா (Simhanka Padasimha, Panchapadasimha) என்ற பெயர்களை உடையவராக்கக் காண்கிறார். மேலும் இவர் மகன் பீமவர்மன் என்று அந்நூல் கூறுகின்றது. பல்லவர் பட்டியலிற் பீமவர்மன், சிம்ம விஷ்ணு இவர்தம் தந்தை மூன்றாம் சிம்மவர்மன் என்பது காண்கிறது. எனவே, இவர் மூன்றாம் சிம்மவர்மனாகலாம் என்பது அறிஞர் கருத்து." அது பொருத்தமாயின், சிம்ம விஷ்ணுவின் (கி.பி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/123&oldid=793147" இலிருந்து மீள்விக்கப்பட்டது