பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மாணிக்கவாசகர் காலம் #15 575-615) தந்தையாரான இவர் காலம் ஏறத்தாழக் கி. பி. 550-575 என்னலாம். இவர் தமது சிவத்தல வெண்பா என்ற நூலில் சிராமலையைப் பற்றி ஒரு வெண்பாப் பாடியுள்ளார். சிராமலையான் பாதமே சேர் என்பது அவ்வெண்பாவின் கடைசி அடி. எனவே இவர் காலத்தில் (கி.பி. 6ஆம் நூற்றாண்டு) சிராமலை என்பது மலையின் பெயராக வழங்கப்பட்டது என்பது தெளிவு. கி.பி. 7ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த முதலாம் மகேந்திரவர்மன் (கி. பி. 615-630) காலத்தவரான திருநாவுக்கரசர், சிராப்பள்ளி மேவிய நாயனா' என்று பாடியுள்ளார். அதே நூற்றாண்டில் வாழ்ந்த திருஞான சம்பந்தர், சிராப்பள்ளி மேய செல்வனா' என்று பாடியுள்ளார். இன்றுள்ள (திருச்சிராப்பள்ளி என்னும் ஊரில் உள்ள) குன்றின் மீது உச்சிப்பிள்ளையார் கோவிலுக்குப் பின்புறத்தில் ஒரு குகையுள்ளது. அதனில் நான்கடி நீளமும் ஒன்றரையடி அகலமும் உள்ள கற்படுக்கைகள் உள்ளன. அவற்றில் உள்ள கல் தலையணைகள்மீது அவற்றைப் பயன்படுத்திய சமண முனிவர் பெயர்கள் பொறிக்கப்பட்டுள. அவற்றுள் ஒன்று சிரா என்பது. அப்பெயர் கொண்ட துறவியாரது சிறப்பினால் அங்கிருந்த சமணப்பள்ளி அல்லது அவரது தவப்பள்ளி சிராப்பள்ளி எனப்பட்டது போலும் அக்கல்லெழுத்துக்களின் காலம் கி.பி. 5 ஆம் நூற்றாண்டு என்பது கல்வெட்டறிஞர் கருத்து.' கி. பி. ஏழாம் நூற்றாண்டினரான அப்பரும் சம்பந்தரும் "சிராப்பள்ளி யைச் சிவன் கோவிலாகப் பாடியுள்ளதை நோக்க, அஃது அவர்கள் காலத்தில் சிவன் கோவிலாக மாறிவிட்டது அல்லது தவப் பள்ளியின் பெயர் சமணர் செல்வாக்குக் குறைந்த காலத்தில் சிவன் கோவிலைக் குறிக்கலாயிற்று எனக் கருதலாம். அப்பர் காலத்தவனான முதலாம் மகேந்திரவர்மன் வேறு சமயத்திலிருந்து சைவனாக மாறிச் சிவலிங்கத்தை அக்குன்றின் மீது எழுந்தருளச் செய்தான் என்பதை அக்குன்றில் உள்ள கல்வெட்டுக்கள் உணர்த்துகின்றன. எனவே, அந்நிகழ்ச்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/124&oldid=793149" இலிருந்து மீள்விக்கப்பட்டது