பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கம்பர் காலம் 163 பெரிய திருமொழியில் மஞ்சுலாஞ்சோலை என்ற பாசுரத்தின் வியாக்கியானத்திலே, ‘ஈக்கள் வண்டொடு மொய்ப்ப (பால, ஆற்றுப்., 10) என்ற இராமாயண அடியை மேற்கோள் காட்டி, 'என்று ஆற்று வரவுகளிலே சொல்லுவர்களாய்த்துத் தமிழர் என எழுதினர் பெரியவாச்சான் பிள்ளை. இவர் பிறந்தது கி.பி. 1228இல், எனவே, சுமார் கி.பி. 1200இல் கம்பனது பெரு நூல் மிக்க பிரசாரம் எய்தியிருந்ததென்பது விளங்கும். தெலுங்குப் பிரதேசமாகிய ஒரங்கல் நாட்டில் பிரதாபருத்திரன் ஆஸ்தானத்திற்குக் கம்பன் சென்றதாகவும், அவனது வள்ளன்மையைப் புகழ்ந்து, அவனிமுழு துண்டும் அயிரா பதத்துன் பவனி தொருவார் படுத்தும்-புவனி உருத்திரா உன்னுடைய ஒரங்கல் நாட்டில் குருத்திரா வாழைக் குழாம் என்ற செய்யுளைப் பாடியதாகவும் ஒரு வரலாறு தமிழ் நாவலர் சரிதையிற் காணப்படுகின்றது. இவ்வரலாறு உண்மையென்றே கொள்ளுதற்குரியது. ஏனெனின், கம்பன் தெலுங்கு முதலிய பிறமொழிச் சொற்கள் பலவற்றை எடுத்தாளுகின்றான்: மசரதம் அனையவர் வரமும் வாழ்வும் w (திருவவதாரம், 22) தாள்மிடைந்தன தம்மி மிடைந்தென (எழுச்சி, 30) கிச்சிடை யிடுமெனக் கிளக்கின் றார்சிலர் (பிணிவட்டு, 3) அக்கட இராவணற் கமைந்த ஆற்றலே (யுத்த, மந்திரப்., 32) அந்து செய் குவனென அறிந்த மாதலி (இராவணன் வதை, 61) என்பன உதாரணங்கள். இவற்றுள் 'மசரதம் கானல் நீர் என்றும், தம்மி தாமரை என்றும், கிச்சு நெருப்பு என்றும் தெலுங்கிற் பொருள்படுவன, அந்து அப்படி என்று கன்னடத்திற் பொருளாம். 'அக்கட' என்பது தெலுங்கில் ஒரு வியப்பிடைச் சொல். மேலை வரலாற்றில் குறிக்கப்பட்ட அரசன் முதலாம் பிரதாபருத்திரனாவான். இவனது கல்வெட்டுக்கள் கி.பி. 1162, 1179 முதலிய 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவனென இவ்வரலாறு உணர்த்தும்".

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/172&oldid=793264" இலிருந்து மீள்விக்கப்பட்டது