பக்கம்:கால ஆராய்ச்சி.pdf/173

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

164 கால ஆராய்ச்சி - "சிவபெருமானை நிறத்தில் ஒத்த வெண்மேகம் கடல் நீரைக் குடித்துத் திருமாலின் கரிய நிறத்தோடு திரும்பியது" என "நீறணிந்த" என்று தொடங்கும் செய்யுளில் கம்பன் கூறியுள்ளான். "இறைவனிடத்திலிருந்து தோன்றி உலகில் பரவியுள்ள பல சமயப் பொருள்போல மழை நீர் மலையிலிருந்து இழிந்து பல கிளைகளாகப் பிரிந்து வருகிறது” என்று மற்றோரிடத்தில் கம்பன் மொழிந்துள்ளான். "பரம் பொருளைக் காணப் போந்த ஒவ்வொரு சமயமும் இறைவனது ஒரு சக்தியைக் கண்டு மயங்கி நிற்பதுபோல இராமனது தோள் கண்டார் தோளே கண்டார் என்று கம்பன் உலாவியற் படலத்தில் உரைத்திருக்கிறான். இவற்றால் கம்பன் நமக்குக் கூறும் அறிவுரை யாது? "இறைவன் ஒருவன் உண்டு. அவனை அடையப் பல சமயங்கள் உண்டு. அவை அனைத்தும் அவனை அடையவே துணை செய்கின்றன. ஆதலால் சமய வேறுபாடு மக்களிடைத் தலைகாட்டலாகாது” என்பதே கம்பன் நமக்குக் கூறும் அறிவுரையாகும். இவ்வறிவுரைக்குக் காரணம் என்ன என்பதைக் கண்டறிந்தால் கம்பன் காலம் தெற்றென விளங்கும். இவ்வறிவுரைக்குக் காரணம் கம்பன் சோழப் பெரு நாட்டில் பிறந்தவன். ஏறத்தாழக் கி.பி. 9 ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் 12ஆம் நூற்றாண்டு வரையில் சோழப் பேரரசு தென்னிந்தியா முழுதும் பரவியிருந்தது. சோழப் பேரரசர் கடல் கடந்த நாடுகளை வென்றனர். ஏறத்தாழ இந்த 400 வருட காலம் சோழப் பெருநாடு செல்வச் சிறப்புடன் விளங்கி வந்தது. செல்வப் பெருக்குப் பல தீமைகளையும் விளைத்தது. குடியும் ஒழுக்கக்கேடும் இருந்தன. போக பாக்கியங்கள் மிகுதிப்பட்டன; சமய வெறி தலைதூக்கியது; சாதிச் செருக்கு மிகுந்தது; சமுதாயத்தில் உயர்வு-தாழ்வுகள்; மேடு-பள்ளங்கள் காணப்பட்டன. பல்லவர் காலத்தில் சைவமும் வைணவமும், சமண பெளத்தங்களுடன் போராடி அவற்றின் செல்வாக்கை ஒழித்தன. அதனால் பிற்காலச் சோழர் காலத்தில் சைவமும் வைணவமுமே தமிழகத்தில் செல்வாக்குற்றன. எனினும், சோழ மன்னர் அனைவரும் சிறந்த சிவனடியார்கள். ஆதலின், சைவம்ே நாட்டில் தனியாட்சி புரிந்ததென்னல் தவறாகாது. சோழ அரசருள் இரண்டொருவர் வைணவத்தை மிகுதியாக வெறுத்தனர். அவருள் ஒருவன் அதிராசேந்திரன் அல்லது வீரராசேந்திரன் ஆவன். இவருள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கால_ஆராய்ச்சி.pdf/173&oldid=793266" இலிருந்து மீள்விக்கப்பட்டது