பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

            நாரணம் புரி தூயாவி மீதுற 
            நானகன்' கர ஞானாபிடேகமு 
            னாளுகந்து பிதா வோடு மேவிய       நசரேயா 
            வாரணங்கலி லேயாவு மாருத 
            வேகமுந்தணி வீறான வாசக 
            மாவகுந்துமெ யாவீநிவாரண.          மறியாகி
            மாரணம் படு பாதாள மாசுணம் 
            மாய வென்றெழு மாராய! பேய் முதல்
            மாள என்றனை ஆளாய் மனோகர      மணவாளா
1. நானகன் - யோவான் திருமுழுக்குநர்.
                                 3
                        கிறித்துவின் பிறப்பு 
            தீர்க்க தரிசனம்: மீகா 5:2; ஏசாயா 7:14.
               'ஜோர் ஜோர் ஜோர்' என்ற மெட்டு 

1 யூதேயா தேச முற்ற யோக முள்ள பெத்தலேம்

 யூதாவின் மாகுலத்தில் ஏது நின் போல் இத்தலம் 

2 இசுரவேலை யாளும் பிரபும் எழுந்தருளும் உன்மிகை

 இதோ ஒரு மகவுயிர்க்கு மென்னும் எளிய கோலக்
                                           கன்னிகை. 

3 இம்மானு வேலனென்றே இவருக்கிடுவர் இயற்பெயர்

 நம்மோடு தேவனென்னும் நலமிகும் பொருள் அதற்குயிர்.
                         4
          காபிரியேல் ;மரியாளை வாழ்த்தல்
                  லூக்கா 1:28-33. 
         'பழனிமாமலை வாழும்' என்ற மெட்டு 
          இராகம் - காப்பி       தாளம் - ஏகம் 

1 கிருபை பெற்ற மரியே கிளர்ந்து நீ வாழ

 பரமன் நித்த முனக்குப் பலந்தரு தோழன் 

2 அரிவையருக்குள் நீயே அடைந்தனை ஆசி

 அஞ்சாதே தேவதிரு அருட்சகவாசி