பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

________________

3 கருப்பவதி யாயொரு கலைஞனைப் பெறுவாய்

 பெருக்க முடன் ஏசென்னும் பேரது தருவாய். 

4 மாபரமனுக்கவர் மகனெனப் படுவார்

 தாவீதின் அரியணை தனயனா யடைவார். 

5 இசுரவேல் குடும்பத்தை என்றென்றும் ஆளும்

 இறுதியவ் வரசிற்கே இலை யொருநாளும்.
                           5
                 கிறித்துவின் பிறப்பு 
             இராகம்-பியாக்   தாளம்-ஆதி
                        பல்லவி
       இத்தரையின் மத்தியினில் பெத்தலையில் சத்திரம்
                      அனுபல்லவி 
          அத்தனேக புத்திரன் கிறித்துவு முதித்தனர்
                        சரணம் 

1 கர்த்தரின் தூதன் நற்செய்திப் போதம்

 செய்த்தலை சென்று சொல்ல மைத்தவர்கண்டுகொள்ள (இ) 

2 உன்னதம் மானம் மண்சமா தானம்

 மன்பதை மேற்பிரியம் மன்னற்காக விண்பாட 

3 மீனு றக் கீழார் வான நன்னூலார்

 மின்னொளிர் பொன்னே தூபம் வெள்ளைப் போள
                                 [மிறுக்க (இ)
  1. மீன் - நட்சத்திரம்
                           6
                ஏசுவின் ஏழைக்கோலம் 
         'வெடலனு கோதண்டபாணி' என்ற மெட்டு
                      தோடி    ரூபகம்
                          பல்லவி 
               ஏசையா இதென்ன கோலம் 
                ஏழையோ நீ இந்திரசாலம்