பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

23

   உண்ணும் சீடர்துயர் 
   நண்ணி நானோவென்று 

ஒவ்வொரு பேராகக் கேட்கும் போது

     உன்னதன் யூதாசைக் காட்டும் 
     ஏசுவேயப்பத்தை யெடுத்தார்
               ஆசிப்படுத்தார்
               பிட்டுக்கொடுத்தார் - இதோ 

என்றன் உடலென்று கொடுத்தார் பின்னர் ஏனங் கொண்டென் ரத்தம் பானம் பண்ணுமென்றே ஏத்தித்தரச் சீடர் மடுத்தார் - உடன் எல்லாரும் ஒலிவத்தடுத்தார் கெத்செமனே என்ற தானம் இருங் கானம் பெரு மானும் - தனி கீழேவிழுந்து தியானம் - சீடர் கிஞ்சித்து மெண்ணாமல் துஞ்சித்தங் கண்ணாரக் கெட்ட தென்ன அவர் மதியே - மிகத் தட்டவும் மன்னவன் விதியே சாகரமென்ன விசாரம் பவப் பாரம் ஏசு சோரும் - அன்று சாத்தானின் பேரதிகாரம் _அந்தச் சங்கடம் நீங்கவே தந்தையை வேண்டியே சாய்ந்து துயில் சீடர் ஓரம் _வந்து தட்டியெழுப்பினர் நேரம்.

        27

யூதாசு காட்டிக்கொடுத்தது, காய்பாவின் விசாரணை பேதுரு மறுதலித்தது

'பாதி ராத்திரி வேளையில்' என்ற மெட்டு