பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

24 காவனந்தனில் ஏகவின் புறம் காதகன் யூதா சு வந்தான் அவர் கன்னத்தில் முத்தந் தந்தான்-பணக் காரியத்தைப் புரிந்தான்-யூதர் கர்த்தன் ஏசுவைக் கைப்பற்றச் சீடர் காற்றா யோடிப் பறந்தார் பேதுரு மிகவேக மாயுறை பேர்த்த கூரிய ஈட்டி- உறப் பிடித்த கையை முன் நீட்டிச் சினம் பெருகவே மறங்கூட்டி - அங்கே பேராசாரியன் வேலைக்காரனைப் பேதித்தான் காதைத் தீட்டி தம்பிரானது கண்டதும் மனம் தாங்காமல் முகங் கடுத்து மிகத் தட்டினார் கையைத் தடுத்து-சீமோன் தரித்தான் வாளுறை மடுத்து தேவ தாசரும் முனங் கூறிய தீர்க்க தரிசனம் வந்ததடுத்து கோமான் ஏசுவைக் காய்பாவின் மனை கொண்டுபோய் யூதர் சேர்த்தார் அங்கு கூடினார் சபை மூத்தார் உடன் கொல்லவே வழி பார்த்தார் சிறு குற்றமேனு மகப்படாமையால் கூறிப்பொய்களைக் கோர்த்தார் ஆலயக்குறை கூறினார் பரன் அமைதியாகக் காய்பாவும் அவர் அரசரீகம் வினாவும் - அவர் ஆமென்ற உரை பாவம் - என ஆடையைக் கிழித் தேசுவை மரத் தறைய மூப்பரை யேவும்