பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

30 அறுமிக்க மணியாதி நவமுற்ற மணிகாறும் அவனிக்கிருள் பரக்கத் தேவனை ஏசு அகதிப்படவுரக்கக் கூவினர் சிலர் வகையிற் பழிமொழியைக் கூறினன் அகவினா னெலியாவை யென்னவோர் மகனறாவுறு காடி தன்னையே அவருக்கொரு கழையில் நீட்டினன் அவர் அகவித் தமதுயிரை வீட்டினர் வலமைத் தேவக நீடு திரையிற் கீழ்வரை கீள மகிமிக்கே யதிர்ந்தது கம்பமாய் பெரு மலைமிக்கே பிளந்தன துன்பமாய் பல வால மாதவர் உயிர்த்தெழுந்தபின் சால மாநகரிடைத் தெரிந்தனர் மகிமைக் காரியமாகக் கண்டவர் - இவர் அருமைத் தேவகுமாரன் என்றனர் சரணப் பணிவிடைகள் புரியப் பரமனோடு சதுரக் கலிலேயாவை நீங்கின - பல மகரக்குழையமாதர் ஏங்கினர்-கதிர் சாயும்வேளை யோசேப்பு நம்பனின் காய மோது பிலாத்துவுந்தரத் தயிலத்தினை மிகுத்துப் பெய்தனன் ஒரு சயிலத்திலே யடக்கஞ் செய்தனன் திருடிப் பழகிநாமும் சிலுவைப்பட நியாயம் சிரமப்படவே யிந்தத் தூயவர் என்ன கருமப் பதகஞ் செய்யலாயினர் என்று தேவனே யுமதரசி லென்னையும் காவுமே யெனவலது கள்ளனும் திருவிற் பெரிய பரதீசிலே-இன்று மருவப் பெறுவை யென்றார் ஈசனும்.