பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

37 அனுபல்லவி பாவியிளைப் பாறுந்தானம் பரிசுத்தாவி யாதீனம் சீவியப்பிர சாதபானம் சிறந்த கற்பகங்கானம் (ப) சரணம். 1 வருந்திச் சுமக்கும்பாவி வகுந்து விரைந்து மேவி பொருந்திச் சிலுவை சேவி புரண்டு போம் பாரந்தாவி புனை மாறும் பண்டை வினைபாறும் புத்தகம்பின் பாதை கூறும் (ப) 2 தேவமறி தாகங்கொண்டு தேடிவந்தன்பாய்த் திரண்டு பாவியுனக்காக வன்று பாடுபட்டுத் தேகம் நைந்த பலிக்கம்பம் வெற்றிக் கொடித்தம்பம் பக்கம் சென்றாலும் பேரின்பம் 1. வகுந்து - வழி. 2. புனை - ஆடை. 40 உயிர்த்தெழுதல் 'தசரத ராஜ குமாரா' என்ற மெட்டு கதிரவன் நாளதிகாலே மரி யாளே பரி வாலே விரை வாளே கல்லறை வெறுமையாக் கண்டனள் முனமே கர்த்தனுயிர்த்தா ரென்று கழறுந் தேவினமே மெல்லிய லழுது பின் மீளுறு கணமே மேசையன் வடிவென்று கொண்டார் அயல் நின்றார் மரி யென்றார் தமை விண்டார் ஏசு மறைந்தவுடன் இன்புறு மரியாள் ஏகினள் சீடரிடம் இமையதுந் தரியாள் தேசுறு மகிழுரை தெரிப்பதற் குரியாள் தேவ மகிமையறி சீடர் மகிழ் கூட நடமாடத் துதிபாட