பக்கம்:கிறித்தவக் கீர்த்தனம் 1981.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

41 பாடுபட்டிரும் பாரச்சிலுவையிற் கூடுவிட்டிகங் குலையுவிங் கோமகன் கேடுகெட்டறக் கீழான வுன்னையும் வீடு விட்ட விதம் தெரிமனமே. காவுபாரத்தைக் கடிதிலகற்றியே தாவம் நீடுயிர்த் தண்ணீரி லாற்றுவென் பாவி காளெனப் பரிந்தழைக்கும் பரன் ஆவலெண்ணியும் அறிதியோ மனமே. பொன்னைத்தானியப் பூமியைக் கானடை தன்னைப் பேணிலாத் தற்பரன் எண்மையில் உன்னை வேண்டவும் உறழுதியோ நெஞ்சே என்னைப் பேதமை இனையவருளரே. தூண்டிலின்பமே துவன்று முலகுனை ஆண்டு கொள்ளவும் ஆசைப்படுதியே நீண்ட இன்பமே நின்னை யுறுத்தவும் வேண்டு மேசுவை விடுவதோ மனமே. விரும்பி யாவையும் விட்டுனைக் கண்கணீர் அரும்ப ஏசுவும் ஆனந்த மேந்தினர் கரும்பு தின்னவுங் காமறு வாரெவர் இரும்பு கல்பிற இளகுவ மனமே. மலைவருந் துயர் மாயுங் கதிர்ப்ப னி அலைவரும் பகை ஆயிரர் என் செய்வர் தலைவருந் திருத் தள்பவோ தாளினால் துலைவரும் ஏனம் துன்மன முனக்கே. 45 திருச்சபைக்கு எச்சரிப்பு சத்திய வேதத்திருச் சபையே தவிர் நவையே கிறித் துவையே பணி குவையே பத்தியின் கனியில்லாப் பாழ்மரம் இனியே பரசினாலறையுண்டு படர்ந்திடும் வனியே அத்திமரம் பட்டதே அளியாது கனியே ஐயா இவ்வாண்டு மிந்த மரமே இட உரமே கனி தரமே எனுஞ் சிரமே