பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/47

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

41

பொன்னைத்தானியப் பூமியைக் கானடை
தன்னைப் பேணிலாத் தற்பரன் எண்மையில்
உன்னை வேண்டவும் உறழுதியோ நெஞ்சே
என்னை பேதமை இனையவருளரே

தூண்டிலின்பமே துவன்று முலகுனை
ஆண்டு கொள்ளவும் ஆசைப்படுதியே
நீண்ட இன்பமே நின்னை யுறுத்தவும்
வேண்டு மேசுவை விடுவதோ மனமே

விரும்பி யாவையும் விட்டுனைக் கண்கணீர்
அரும்ப ஏசுவும் ஆனந்த மேந்தினர்
கரும்பு தின்னவுங் காமறு வாரெவர்
இரும்பு கல்பிற இளகுவ மனமே

மலைவருந்துயர் மாயுங்கதிர்ப்பனி
அலைவரும் பகை ஆயிரர் என்செய்வர்
தலைவருந் திருத் தளபவோ தாளினால்
துலைவரும் எனம் துன்மன முனக்கே

 

45
திருச்சபைக்கு எச்சரிப்பு.
'கற்பிற்சிறந்த எந்தன் கனியே' என்ற மெட்டு.
சத்திய வேதத்திருச் சபையே

தவிர் நவையேகிறிஸ் துவையேபணி குவையே

பத்தியின் கனியில்லாப் பாழ்மரம் இனியே
பரசினாலறையுண்டு படர்ந்திடும் வனியே
அத்திமரம் பட்டதே அளியாது கனியே
ஐயா இவ்வாண்டு மிந்த மரமே
இட உரமேகனி தரமேஎனுஞ் சிரமே

பொறுமையுடன் கிருபை புகழ் பரிதாபம்
பொற்பரன் கொண்டபோதே போக்குவாய் பாவம்
இறுதியில டைகுவர் எல்லையில் கோபம்
ஏதுஞ் செய்துமறாத நீதம்
ஒரு போதும்இலை பேதம்தெளிவேதம்