பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/55

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

49

3விண்ணவன் நாமத்தை வீணிலுரைப்பார்க்கே
மண்ணியல் ஏதுக்கடி (மடந்தாய்!)
(மண்ணியல் = பாவநிவாரணம். தேவன் தமது நாமத்தை
வீணில் வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார்.)

4ஓயாது தேவனை உருகி நினைப்பார்க்கே
ஓய்வு நாள் ஏதுக்கடி (மடந்தாய்!)
(இடைவிடாது தேவனை எண்ணுவார்க்கு எல்லா நாளும்
ஒன்றே.)

5பெற்றவரை யென்றும் பேணியிருப்பார்க்கே
கற்பமு மேதுக்கடி (மடந்தாய்!)
கற்பம் = காயகற்பம். ஆயுளை நீட்டிக்கும் சித்தர் மருந்து.
'"..உன் வாழ் நாட்கள் நீடித்திருப்பதற்கு உன் தகப்பனையுங்
தாயையுங் கனம் பண்ணுவாயாக.

6கோபங் கொள்ளாமலே குணமாயிருப்பார்க்கே
யோகங்க ளேதுக்கடி (மடந்தாய்!)
(மனதை யடக்குவதே யோகநிலை.)

7கட்டப்பசியேனும் களவு செய்யாதார்க்கே
காவல ரேதுக்கடி (மடந்தாய்!)
காவலர் = காவற்காரர்.

8விபசாரம் செய்யாத வித்தகருக் கல்லால்
உபசாரம் யாருக்கடி (மடந்தாய்!)
(விபசாரிகளை எவரும் வீட்டிற் சேரார்)

9சத்தியமே என்றும் சாற்றியிருப் பார்க்கே
சத்திய மேதுக்கடி (மடந்தாய்!)
சத்தியம் = பிரமாணம்.
10ஏனையவர் பொருள் இச்சியாதவர்க்கே
கானகம் ஏதுக்கடி (மடந்தாய்!)
(இச்சையில்லாதவர்கள் சோதனையினின்று நீங்குமாறு
காட்டுக்குச் சென்று தவம் செய்ய வேண்டியதில்லை.)