பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/56

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

50

கற்பனைகள் பத்தும் கைக்கொண்டிருப்பார்க்கே
பொற்பனை ஏதுக்கடி (மடந்தாய்!)
பத்துக் கற்பனைகளையுங், கைக்கொண்டிருந்த ஒரு யூதன் ஏசுவினிடம் வந்து தன்னை நீதிமானாகக் காண்பிக்க விரும்பினான். அப்போது ஏசு 'உன் உடமைகளை யெல்லாம் விற்று வறியோர்க்கு வழங்கு' என்று சொன்னார்.
பனை = ஒரு பெரிய அளவு.

58
விசுவாசம்.
'என்னடி நான் பெற்ற மங்கை' என்ற மெட்டு.


ஏசுவையே விசுவாசி
நீ சுவாசி ஞானவாசி
உனக்-கின்றே துன்பமெல்லாம் வாசி
இங்கே - எனையர்க் கூழிய
மாகவே வாழிய
ஏசுவின் அன்பே நீ வாசி
அதற் - கேமமாக வேதம் வாசி

நல்வினையில்லா விசுவாசம்
அது நாசம் பெரு மோசம்
ஏசு - நாதனைப் பேய்களும் பேசும்
நன்றும் - நம்மாலில்லை யொன்றும்
நம்பன் அருளென்றும்
நல்லவரின் சகவாசம்
அதில்- செல்லவிடு அவ காசம்

பக்தர் செல்லும் பர மார்க்கம்
வினை தீர்க்கும் மலை பேர்க்கும்
குடும்- பத்தாரையும் மோட்சம் சேர்க்கும்
வழி - பாறை முள்ளின்பாலே
பட்டமுளை போலே
பாகஞ் செல்லாமலே தீர்க்கம்
ஓடு - பந்தய மாகணி யார்க்கும்