பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/57

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51

கட்டி யுடுக்கவும் உடையே
உண்ணும் மடையே பெரு முடையே
என்று - கட்டப்படாதே நீ இடையே
அந்தக்-கானத்து மல்கிய
காகத்தை லில்லியைக்
கண்டு நம்பிக் களிப்படையே
அவை - கர்த்தரின் நிச்சயக் கொடையே

துன்பம் வரிற் கலங்காதே
மலங்காதே விலங்காதே
பொன்னின் - தூயபுடமேயப்போதே
பெருந்- துன்பத்தி லின்பமும்
அன்புற்ற வன்பமும்
துங்கன் திருவடிப் போதே
அதில் - தங்குவாய் தீங்கடுக்காதே

59
திருப்தி.
பாவஞ்செய்யாதிரு நெஞ்சே' என்ற மெட்டு.
நாதநாமக்கிரியை ஏகம்.

பல்லவி

போதுமென்றே யிரு மனமே-அது
போன்றதில்லை லோக மூன்றினுந் தனமே

சரணம்

1ஆசைக்கோ ஓரளவில்லை - அதன்
ஆணைவழிச் செல்ல அளவில்லாத் தொல்லை
காசைக் கையாடவே நல்லை - பிச்சைக்
காரனைக் கண்டாலுங் கடிப்பாயே பல்லை (போ)

2கவலைப்படுவதனாலே- எவன்
காயத்திற் கூட்டுவான் ஒருமுழம் மேலே
கவனத்தோடேயிது காலே - அந்தக்
காகத்தை லில்லியைக் கண்டறி நூலே (போ)