பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52

3ஏதும் நம்மாலே யாகாது- அந்த
இறைவன் செயலாகும் எல்லா மென்றோது
தீது வெறுப்பத் தீராது- வாராத்
திருவை வா வென்றாலுந் திரும்பிப்பாராது (போ)

4பொன்னும் வெள்ளியும் இரும்பு - நாமே
போகும் வழியுள்ள கல்லெல்லாம் கெம்பு
திண்ணையிருந்தாலுந் தெம்பு-பர
தேசிக்கென்னகுறை தெற்றென நம்பு (போ)

5உண்பது நாழியே திண்ணம்-என்றும்
உடுப்பது நால்முழம் உகந்ததோர் வண்ணம்
எண்பது கோடியே எண்ணம் - இங்கே
இருக்குந்துணையுமதே யிடுக்கண்ணும் (போ)

6பேராசையாற் பெரு நஷ்டம் - அந்தப்
பெருமான் மேலுள்ள விஸ்வாசமுங் கஷ்டம்
தீராத நோய்தனக் கிஷ்டம்- அவன்
தெருவாருக்கும் மிகத் தீரும் அதிர்ஷ்டம் (போ)

60
கிறிஸ்துவுக்காட்பட வாஞ்சை.

"சரணகமலாலயத்தை' என்ற மெட்டு.

கனகமயமாயுதித்த தினகரனையே நிகர்த்து
கனமகிமையா யெடுத்த மறுரூபா

கவலையறவே விடுத்து வளரும்விசுவாச முற்று
முதலுனது ராஜியத்தின் முறைதேடி

எனதுயிரையே வெறுத்து வழிசிலுவை தோளெடுத்து
இடுகுவழி நீ தொடுத்த அடியேகி

இறுதிவரையே பொறுத்து நெடுமகுடமே கவித்துன்
இணையடி பராவி நிற்க அருள் தாராய்

பனகவழி பாவமுற்ற மரணமிகு பாதலத்து
மருவியொரு வாகை பெற்ற மனுவேலா