பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/59

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53

படைகளொடு போர்மிகுத்த கடியுலகு தேகமுற்று
முடியவொரு மாபலத்தை அருள்வாயே
மனது குவியாமல் நித்த முலவு சிறு போகநத்தி
மறுகுபவ சாகரத்தி லெனை யாளாய்
மலி கடலிலே நடக்க முயலுமொரு சீடனுற்ற
துயரை யுடனே தவிர்த்த குமரேசா

61
காலைப்பாட்டுகள்.
கானடா - ஆதி

பல்லவி
வைகறை விழித்தெழு மனமே
வாழ்த்துவாய் கிறிஸ்துவை முனமே
அனுபல்லவி
வைகிய பறவைகள் இனமே
வைதாளி பாடுவ வணமே

சரணம்


1சேவல் கூவுமுன் எனதிறையைச்
சீமோன் மறுத்தான் மூன்று வரையே
பாவி மறுத்தேன் பல முறையே
பகவான் பொறுத்தார் என்றன் குறையே (வை)

2கிழக்கிலுதித்த விடி வெள்ளி
கிறிஸ்தின் பிறப்புவமை தெள்ளி
விளக்கி விரையும் மிசை தள்ளி
விடியும் வரை வயிர மெள்ளி (வை)

3காவி நெகிழக்கவின் மரையும்
கமழும் மதுரமிகு நறையும்
தேவமகனு முவந் துறையும்
திறவாய் பவமுடனே மறையும். (வை)

கவின்==அழகு.