பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

54

62
பூபாளம் - சாப்பு.

பல்லவி
காலை ஏசுவை நெஞ்சமே
கண்டடை பதகஞ்சமே
அனுபல்லவி
மாலையென் னொடு மஞ்சமே
மருவிக் காத்தவர் தஞ்சமே
சரணம்

1நல்ல நித்திரை தந்தனர்
நாசமின்றிப் புரந்தனர்
உள்ள கத்தை யுகந்தனர்
உயிரிரத்த முஞ்சிந்தினர் (கா)

2நாளிதிற் செயல் யாவுமே
நம்பனாரருள் மேவுமே
கூளி மெய்ச்சக ஏவுமே
கொஞ்ச மும்மிலை நோவுமே (கா)

3உறங்கிப் பின்பு விழித்ததும்
உயிர்த் தெழுந்ததை யொத்ததே
இறங்கித் தூயர் சந்தித்ததும்
எனையு மின்ப முறுத்தவே (கா)

தஞ்சம் = 1 எளிது 2 சரணம் கூனி = பிசாசு மெய் = மாமிசம் சகம் = உலகம்.

63
நொறுங்குண்ட பாவியின் முறையீடு.
தோடி - நபகம்.

பல்லவி

இனியாகிலும் ஏழைக்கிரங்குவாய் ஏதுந்துணையில்லை
ஏசுக்கிறிஸ்தையா