பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/61

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

55

அனுபல்லவி

தனியே துயர் தாங்கு தில்லை மனம்
தத்தளித்தேன் பற்றறவே தற்பரனே அற்புதனே (இ)

சரணம்


கனியாத செங்கா யேனும் காசினி
காமுறுமே தேமாக்கதலியோ டாசினி
மனியாதே யுன் மனிதிலென் மாசினி
மதித்திடாய் மாணவே அளித்திடாய் ஆசிநீ (இ)

2சேயானவர் தீயவராயினும்
சேர்த்தணைத்தே யருள் செய்குவர் தாயெனும்
மாயாவுரை மருவுமெவ்வாயினும்
மருட்பட்டே நாயினுங் கடைப்பட்டே போயினும் (இ)

3கடலே மிகிற் கட்டவும் ஏதணை
காற்றுமி கின் அதைக் கழறவும் யாரிணை
அடலேறெனும் ஆண்டவ நீ துணை
அலைப்பட்ட எறும்புபோல் அலைப்புண்டேன் அரவணை (இ)

4அசரீரிநீ ஆகையால் எப்போதும்
அல்லற்படுந்துயர் அறிவதில்லை யேதும்
நிசமாயினும் சோதனை யும் போதும்
நித்திய னேநானம்பினேன் பத்தியுடனே யுன்பாதம் (இ)
5எவராயினும் எய்துவரேல் நோவும்
எண்ணிலவை யொன்றிரண்டாகவே மேவும்
நவமே யென்னை நண்ணின நோய் யாவும்
நட்டமுடனேனுஞ்சாகத் தற்கொலையுமாகும் பாவம் (இ)

64
உலக நிலையாமை : ஒரே துணை.
'சங்கரா சிவ சங்கரா' என்ற மெட்டு.

பல்லவி

ஏசுவே கிறிஸ் தேசுவே கிறிஸ் தேசுவே எனக்கோர்துணை
ஏழையேனையிவ் வேளையில் கரை யேற்றவும் வேறுயார்புணை