பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/62

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56

சரணம்

1சேதற்ற கடல் சென்று தேடிய செல்வமுங் கோடியாயினும்
காதற்றவூசி தானும் பின்னொரு கடைவழிக்கு வாராதுகாண்

2வாரணங்குழை கொண்டெறிந்திடும் வாழ்க்கையும் நிலை நிற்குமோ
காரணம்பல கண்டறிந்துநீர் கர்த்தன் பாதத்தைப் பற்றுவீர்

3பேதமானவறிவினா லொரு பிணத்தையே யுயிரென் றெண்ணிக்
காதன் மாதருமைந்தருங் கடைகல்லறை மட்டே நண்ணுவர்

4தந்தைதாய்தமர் தாரமும்பெற்ற தனயரும்மற்றும் அனையரும்
சந்தைபோலிங்கு கூடுவார்பின்பு சடுதியாகவே மறைகுவார்

5எத்தனைபல செல்வமாயினும் இமையில் வீழ்ந்து வெறிக்குமே
கத்துமாகடல் கரைமறுத்தபின் கண்டமைந்தும் மறிக்குமோ

6மன்னராயினும் மக்களிற் பிறரென்னராயினும் மாள்வரே
இன்னுயிர்மனை யாளொடே யிங்கும் ஏதிலாரடி வீழ்வரே

7அவனிவந்தாலும் அடுவேனென்றுரை ஆகவமல்ல வாகனே
அவனையன்றியோர் அணுவையாயினும் அசைக்கவும் உன்னா லாகுமோ

8தன்பலத்தையே நம்பிச்செய்வது தருமமேனும் விளங்குமோ
மண்குதிரையை நம்பியாற்றினில் மானிடர் யாரிறங்குவார்

9ஆணையவ்வனம் அழகுவல்லமை அறிவு சௌக்கியம் ஆறுமே
பேணிநம்புவர் பிணிகள் வந்திடில் பேருமே நிலை மாறுமே

10காயமே பரு நோயுற ஒரு காசுமில்லாத லாசரு
ஆயினும் விசுவாசியின் தந்தை ஆபிராம்மடி சேரவே

11பேயும் தேகமும் பாரும் மண்டியே பெரிய போராட்டஞ் செய்கினும்
மாயும் வேளையில் மாயை வந்துளம் மறுகி மாறாட்ட மெய்தினும்

12மண்ணிலாகிய மானிடன் பின்னும் மண்ணுளேகினான் ஏதமே
கண்ணி வந்துயிர் நல்கிய ஏசுநாதனால் பிழை நீதமே