பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/67

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

61

70
100ம் சங்கீதம்.

'மாற்றறியாத' என்ற மெட்டு.
சுருட்டி - நபகம்.

1மானிடரே கீதம் பாடிக் கெம்பீரம்
மகிழ்ச்சியாய்க் கர்த்தரை வணங்குமெல்லாரும்
ஆனந்தமாயவர் சந்நிதி வாரும்
ஆராதனை செய்தே அவருடன் சேரும்
ஞானமாய்க் கர்த்தரே தேவனென் றோரும்
நாமல்ல அவரே தான் நமைப்படைத்தாரும்
கோனவர் நாம் மந்தை மேய்ச்சன்மகாரும்
குணமாகக் கூடியே தினங்களி கூரும்

2கட்டுவார் பிரயாஆலய வாசல் அவர்பிரகாரம்
அருந்துதி புகழ்ச்சியோ டவர் நாமங்கூறும்
சீலர் கர்த்தர் அவர் திருவருட்சீரும்
சேர்ந்த வுண்மையுமுண்டு தலைமுறை தோறும்
மூலமுதன்மைத் தேவர் மூவாமுப்பேரும்
முந்து மகிமைபெற முக்கியவாரம்
கால மெல்லாமது கண்டுள்ளவாறும்
கருதியபடி யாமென் கானத்தினீறும்.சம் விருதா

71
121ம் சங்கீதம்.
'காலமதாயப்படுத்து' என்ற மெட்டு.

பல்லவி

உன்னத முதவும்மலை - உயரவிரு
கண்ணு மேறெடுத்தநிலை-எனக்குகந்த

அனுபல்லவி

விண்ணும் மண்ணும் படைத்த வேதன் கண்ணேயிருந்து
நண்ணும் ஒத்தாசையதை நம்பிவந்தேன் புரிந்து