பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/68

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

62

சரணம்

1காலைத்தள்ளாடவே யொட்டார்- உன்னைக்காப்பவர்
காரியக்காரர் உறங்கார் - கவனமாக
மேலைக்கதியிரை வேலைக் காக்கிறவரெக்
காலு முறங்குவதும் கண்மூடுவதுமில்லை-

2கர்த்தருனது காவலர்- வலதுபக்கம்
கண்ணாரும் நிழலாகுவார்-கண்ணியமாக
பட்டப்பகல் வெயிலும் பாதியிரா நிலாவும்
பாதை விளைநிலத்தும் சேதம் செய்வதுமில்லை.

3காக்கிறார் உன்னைக்கர்த்தரே - தீங்கைவிலக்கி
ஆத்துமம் தன்னை நித்தமும்-அரவணைத்து
போக்கும் வரத்துமின்றிப் பூமிமுடிவரையோர்
போக்கும் வராதபடி காக்குங் கருணைக்கடல்

72
127ம் சங்கீதம்.
பார்சிமெட்டு-ஏகம்.

பல்லவி

கர்த்தர் கட்டா ராகில் வீட்டைக்
கட்டுவார் பிரயாசம் விருதா
கர்த்தர் நகரங் காவா ராகில்
காவலர் விழித்திருக்கை விருதா

அனுபல்லவி


காலையி லெழுந்து நீர் கருமங்கள் புரிந்தபின்
கஷ்டத்தின் பலனையுண்பதும் விருதா.

 

1கர்த்தரோ தமக்கே இஷ்டமானவராம்
பக்தருக்கே சுக நித்திரை யளிப்பார்
புத்திர சுதந்தரம் கர்த்தரால் வருவது
கர்ப்பத்தின் கனியவர் தரும் பலனே

2வாலவயதின் மகார் வல்லவன் கணைகள்
சாலவும் அவைநிறை சமரன் பாக்கியவான்
நாணமில்லாமலே ஒலிமுக வாசலிற்
பேணலருடனவர் போவாரே