பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

63

73
133ம் சங்கீதம்.
'சுதேசமகமதல்லி' என்றமெட்டு (முதலில் தரு அசை கூடியது)

பல்லவி

சகோதரர் ஐக்கியமாய்ச் சஞ்சாரம் செய்துவரும்
மகாநலமின்பமுடன் மகிமையான வன்மைபெறும்

தொகையறா

ஆரோன் சிரசினின்றங்கிமேல்வடியும் அபிஷேக வாசனைத்தைலம்
சீராக முடிமிசை தங்கிவார் பனியும் சீயோன் எர்மோனின் சைலம்

பல்லவியெடுப்பு

கர்த்தரோ ஆவலாகக் கட்டளையிடுகின்றாரே
நித்தியஜீவனுடன் நெடிய ஆசீர்வாதம் பாரே

 

74
148ம் சங்கீதம்.
'சூழ்ந்துசர்க்கா' என்ற மெட்டு

1வானமீதே வாழ்பவைகாள் வணங்குங் கர்த்தரையே
சேனையோடே தூதரெல்லாம் சேவியும் அல்லேலூயா

2மீனங்களே சூரியரே மிளிருஞ் சந்திரரே
வானங்களே விண்ணீர்களே வணங்குங்கள் அல்லேலூயா

3கர்த்தரின் நாமத்தையென்றும் துதிக்கவுங்களை
கட்டளையினால் அவர் முன் படைத்தனர் அல்லேலூயா

4நித்திய காலமுங்களை நிறுத்தி யுங்கட்கே
நிலைத்த மாறாப்ரமாணத்தை நியமித்தார் அல்லேலூயா

5பூமியுள்ள மாந்தர்களே போற்றுங்கர்த்தரையே
நாமமுள்ள ஆழங்களே நாமிகுந்தீ கன்மழையே