பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

108

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


சாதிவேற்றுமை ஒழிப்புக்கொள்கையில் கந்தசாமித் தம்பிரானுக்கும் உடன்பாடே! அதனால் அறிஞர் அண்ணாவின் கொள்கையை மறுக்கவில்லை ஆனால், சேக்கிழார் இயற்றிய பெரிய புராணம் சாதிகளைக் காப்பாற்றும் நூல் என்ற கருத்தில் கந்தசாமித் தம்பிரானுக்கு உடன்பாடில்லை. "காலந்தோறும் கருத்து வளர்கிறது. இலக்கியங்கள் - புராணங்கள் உட்பட அந்தக்கால சமுதாயத்தைக் காட்டும் கண்ணாடியேயாம். சில படைப்புக்கள் எதிர்காலத்தையும் காட்டலாம்! 12-ம் நூற்றாண்டில் தோன்றிய இலக்கியத்தில் 20-ம் நூற்றாண்டில் வாழும் மனிதனுடைய சிந்தனையைக் காண இயலுமா? சில நல்ல படைப்புக்கள் என்றும் பயன்படும். 'கரு' இருக்கலாம், சேக்கிழார் காலத்தில் சாதிகள் இருந்தன. அப்பரடிகள் காலத்தில் இருந்தன. ஏன்? சங்க காலத்திலேயே இருந்தன. 'கீழ்ப்பால் ஒருவன் கற்பின் மேற்பால் ஒருவனும் அவன்கட்படுமே' என்று புறநானூறு பேசுகிறது. சேக்கிழார் இந்தச் சாதி வேற்றுமையிலிருந்து சாதிகள் இல்லாத சமுதாயத்தை நோக்கி நகர்த்துகிறார் என்பதைப் பெரிய புராணத்தால் உய்த்துணர முடிகிறது. திருநாளைப்போவார் ஆதிதிராவிடர், திருக்கோயில் வழிபாட்டுரிமை பெறாத சாதியைச் சேர்ந்தவர். ஆனால், அவர் திருக்கோயில் வழிபாட்டுரிமை கேட்டுப் போராடுகிறார். இது வரவேற்கத் தக்க வரலாற்று நிகழ்ச்சி.... மனித உரிமைப் போராட்டம் தொடங்குகிறது. தொடர்ந்து வளர்க்க வேண்டிய கருத்து. இந்தக் கடமையைச் சேக்கிழார் செய்துள்ளார். சுந்தரமூர்த்தி நாயனாருக்குக் கலப்புத் திருமணங்கள் நடத்தி வைக்கிறார் சிவபெருமான், வேடர் கண்ணப்பருக்கும் வைதீக சிவகோசியாருக்கும் பூஜையில் ஏற்பட்ட மோதலை விவரித்து, கண்ணப்பர் பூஜையே உயர்ந்தது என்று தீர்ப்பு எழுதுகிறார். சேக்கிழார் காலத்தில் இவ்வளவுதான் செய்ய இயலும்! அன்றைய நிலையில் அதுவே ஒரு பெரிய சமுதாய