பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

109


மாற்றம்! அவர் வாழ்ந்த காலம், தலைவர் பெரியார் வாழ்ந்த காலமன்று-இதுதான் மறுப்புரையின் சாரம்!

விவாதங்கள், மறுப்புரைகள் ஒருபுறம், மதிப்பு உணர்வு கொள்ளல், பாராட்டல் ஒருபுறம். இன்றைய பொதுவாழ்வில், இலக்கிய உலகில் இந்தப் போக்கு இல்லாதது ஒரு பெரிய குறையே..... அறிஞர் அண்ணாவைப் பொறுத்தவரையில் கந்தசாமித் தம்பிரான் நிலை இது. அறிஞர் அண்ணாவின் நிலையும் அதுவே.

இதுபோலவே, தருமபுர ஆதீனத்தில் இருக்கும் காலத்திலேயே பட்டிமன்றம் தொடங்கப்பெற்றுவிட்டது. ஆவணி மூலத்திருநாள்! 'தருமிக்குப் பொற்கிழி அளித்த வரலாற்றில் குற்றம் செய்தவர் சிவபெருமானா? - நாக்கீரரா? என்பது தலைப்பு. நடுவர் ஆசிரியர் புலவர் மு. ஆறுமுக தேசிகர், நக்கீரர் கட்சியில் கந்தசாமித் தம்பிரான் வாதிட்டார். “நக்கீரர் குற்றவாளியல்ல, சிவபெருமானே குற்றவாளி!” என்பது கந்தசாமித் தம்பிரான் வழக்கு! "முதலில் 'பினாமி'க் கவிதை எழுதுவதே பெரிய தவறு. நக்கீரருடன் புலவனாக வந்து வழக்காடிக் கொண்டிருந்த சிவபெருமான், விவாதம் நல்ல உச்ச நிலையில் இருக்கும் போது சிவபெருமானாக மாறி நெற்றிக்கண் காட்டியதும் முறையல்ல.. புலமை, புலமையோடு மோதவேண்டுமே தவிர, நெற்றிக்கண்ணுக்குத் தமிழ்ச் சங்கத்தில் என்ன வேலை? வன்முறையில் தமது கருத்தை ஏற்கச்செய்தல் நல்ல மரபாகாது!” என்பது கந்தசாமித் தம்பிரானின் விவாதம். அறிவார்ந்த விவாதங்களுக்கு எப்போதும் வசையும் வன்முறையும் தலைகாட்டும்.

"ஆயினும் இந்தத் தவற்றை சிவபெருமான் செய்திருக்க மாட்டார்.... பத்திமையின் காரணமாக சிவபெருமானுக்குப் பெருமை சேர்க்கிறோம் என்று கருதிக்கொண்டு புராணம்