பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மண்ணும் மனிதர்களும்

113


10

அறிஞர் அண்ணா அன்று தந்த பதில் "காலம் விடை சொல்லும்... காத்திருக்கலாமே!" என்பது. 1967 பொதுத் தேர்தலில் வெற்றிப்பெற்ற பிறகு அறிஞர் அண்ணா தலைவர் பெரியாரைக் கண்டதும் “இது பெரியார் அரசு" என்றதும், "இராஜாஜி தேனிலவு முடிந்து விட்டது" என்று கூறியதும் காலம் தந்த விடைகளாகும்.

அறிஞர் அண்ணாவிடம் சோர்விலாத இனப்பற்று இருந்தது. தலைவர், காமராஜரைப் 'பொற்காப்பு' என்று பாராட்டினார். கட்சி எல்லையைக் கடந்த இதயம் அறிஞர் அண்ணாவுக்கு இருந்தது. அதேபோழ்து இனப்பகை அற்றவர் என்பதை மூதறிஞர் இராஜாஜி, வழக்கறிஞர் வி.பி. இராமன் போன்றவர்களிடம் அவர் வைத்திருந்த மதிப்பினால் உணரலாம்.

சித்திரைத் திங்கள்! பூம்புகாரில் சிலம்பின் நினைவுச் சின்னம் அமைக்கத் தமிழ்நாடு அரசு திட்டமிட்டது. சோழப் பேரரசின் தலைநகரம் பூம்புகார், சோழ நாட்டில் பிறந்து அரசியலில் வளர்ந்த கலைஞர், சோழர்களின் புகழ் பாடுவதில் முன்னணியில் நிற்பவர். கலைஞர் அப்போது பொதுப்பணித்துறை அமைச்சர்! கால்கோள் விழா ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்தன. நமக்கும் மிகவும் விருப்பமான காப்பியம் சிலப்பதிகாரம். பூம்புகாரில் அப்போது நடைபெறவிருந்த கண்ணகி விழாவுக்கு நாம் இசைவு தந்திருந்தோம். கண்ணகி விழாவும் தமிழ்நாடு அரசு எடுக்க இருந்த கண்ணகி கோட்டம் கால்கோள் விழாவும் இந்திர விழாவும் அதேநாளில்! கண்ணகி விழாவில் நாம் கலந்து கொள்ளவிருக்கும் செய்தி, முதலமைச்சர் அறிஞர் அண்ணாவுக்கு எட்டியது. உடனே நமது அலுவலகத்துக்குத் தொலைபேசி அழைப்பு! ஆனால், அங்கு பதில் இல்லை. உடனே தஞ்சை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு