பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 16.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

114

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


முதலமைச்சர் அறிஞர் அண்ணாவின் ஆணை; "அடிகளாரைக் கண்டுபிடித்துக் கண்ணகி கோட்டம் கால்கோள் விழாவில் கலந்துகொள்ளும்படி முதலமைச்சர் சார்பாகக் கேட்டுக் கொள்ளுங்கள்!" என்பது, மாவட்ட ஆட்சித் தலைவரும் இசைவு பெற்றார். கட்சியைச் சேர்ந்தவர்கள், வேண்டியவர்கள் என்ற எல்லைகள் நீங்கினால்தான் நடுநிலையாளர்கள் மதிக்கப்படுவார்கள்... நாட்டுக்குத் தேவையான ஒருமைப்பாடு வளரும்.

கண்ணகி கோட்டக் கால்கோள் விழா மேடை! முதலமைச்சர் அறிஞர் அண்ணா, பொதுப்பணித்துறை அமைச்சர் கலைஞர், மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோருடன் நாமும் மேடையில் இருந்தோம். அறிஞர் அண்ணா பேசும்போது, "அடிகளார் அவர்களே! தாங்கள் இந்த விழாவுக்கு வந்தது மகிழ்ச்சியைத் தருகிறது. முந்தைய அரசு உங்கள் மீது வழக்குப் போட்டது... சிறைக்குள் தள்ளத் துடித்தது. இந்த அரசு உங்கள் அரசு! உங்களுக்குத் தொல்லை தராது! வரவேற்கும் தங்களுடைய ஆலோசனைகளை வரவேற்கும்!” என்று பேசினார். 1967 பொதுத் தேர்தலில் அறிஞர் அண்ணாவை எதிர்த்து நாம் வேலை செய்ததை நினைவில் கொண்டிருந்தால் அவருக்கு இந்தப் பண்பு முகிழ்ந்திருக்காது. அதனால்தான் திருக்குறள் 'நன்றல்லது அன்றே மறப்பது நன்று' என்றது. அறிஞர் அண்ணாவின் “மறப்போம்... மன்னிப்போம்” என்னும் புகழ் பெற்ற மொழி இங்கே நினைவுகூரத்தக்கது. எவ்வளவு பெரிய உள்ளம்! பெருந்தன்மை!

பல சமயங்களில் 'அரசு விழாக்களுக்குக் கட்சிக்காரர்களை மட்டுமே அழைக்க வேண்டும்... வேண்டியவர்களை மட்டுமே அழைக்க வேண்டும்' என்ற கொள்கை நிலவியதுண்டு! நிலவுகிறது. ஏன்? காங்கிரஸ் அமைச்சரவை இருந்த போது ஒரு நிகழ்ச்சி! அந்த நிகழ்ச்சிக்கு நம்மை அழைக்கக்